Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சுரைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியெனில் சுரைக்காயைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியெனில் சுரைக்காயைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். இந்த சுரைக்காய் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மதியம் வைத்த சாம்பார் மீதமிருந்தால், அதை இரவு நேரத்தில் இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த சுரைக்காய் உடல் எடையை குறைக்க உதவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய சுரைக்காயை இனிமேல் உங்கள் உணவில் சேர்க்க தவறாதீர்கள்.
உங்களுக்கு சுரைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* துவரம் பருப்பு - 1 கப்
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் இரண்டு முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் கழுவிய துவரம் பருப்பைப் போட்டு, அத்துடன் 3 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, விளக்கெண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* குக்கர் விசில் போனதும், குக்கரைத் திறந்து அதில் துண்டுகளாக்கப்பட்ட சுரைக்காய், நறுக்கிய வெங்காயம், சாம்பார் தூள், புளிச்சாறு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் விசில் போனதும் மீண்டும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாரில் ஊற்றி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சுரைக்காய் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications












