Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்!
Venus Transit In Libra Make Malavya Rajyog 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் நுழைந்தார்.

இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். தனது சொந்த ராசிக்கே சுக்கிரன் செல்வதால், மிகவும் மங்களகரமான மற்றும் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது செல்வம், செழிப்பு, காதல், சொத்து, தொழில் முன்னேற்றம் போன்றவற்றை ஊக்குவிக்கிறது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகத்தை விரிவாக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் சுக்கிரனின் அருளால் கைக்கு வந்து சேரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபமும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியும் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னும், பொருளும் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தை காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
