Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
Mercury Transit In Virgo 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.

இந்த புதன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைவார். இப்படி புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
முக்கியமாக 4 ராசிக்காரர்கள் புதனின் இந்த ராசி மாற்றத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் வெற்றிகளையும் குவிப்பார்கள். இப்போது புதன் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இதன் மூலம் கடன்களை அடைப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மன நிலை மேம்படும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்களை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் நல்ல உயரத்தை அடைவீர்கள். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் பெரிய அளவில் வெற்றியைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

