Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
தக்காளி சட்னியை ஒருதடவை இந்த ஸ்டைலில் அரைச்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...!
Boiled Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி. காலைப்பொழுதை மகிழ்ச்சியாகத் தொடங்க இதுவே சிறந்த வழி.
தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். ஆனால் தக்காளி சட்னியை நூற்றுக்கணக்கான வழிகளில் அரைக்கலாம். அதில் ஒரு தனித்துவமான வழியைத்தான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம். இந்த முறையில் தக்காளி சட்னி அரைப்பது மிகவும் எளிது அதேசமயம் கூடுதல் சுவையானதும் கூட. இந்த சட்னியை சில நிமிடங்களில் அரைத்து விடலாம். ஏனெனில் இதில் அனைத்து பொருட்களையும் வேகவைத்து நாம் அரைக்கப் போகிறோம்.

உங்களுக்கு வேகவைத்த வித்தியாசமான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேகவைத்த தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பழுத்த தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 1
- பூண்டுப் பல் - 4
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 1 கப்
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கொத்தமல்லி இலை - 1 ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நன்றாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில், நறுக்கிய பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். இதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- பிரஷர் குறைந்து நன்கு ஆறியதும் இதை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும் அல்லது பருப்பு மத்து வைத்து மசித்துக் கொள்ளளவும்.
- பின்னர் இரு கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் இதை அரைத்து வைத்த சட்னி மீது கொட்டி சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- சட்னி கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சூப்பரான தக்காளி சட்னி ரெடி.
- இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
