Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
5 மாதங்களில் 2 முறை நடக்கும் குருப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
4 தக்காளி, 2 வெங்காயம் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. குழப்பி அடிப்பாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனநிம்மதியான நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
ஏப்ரல் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடியை செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...! -
ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள்! யார்யார்-ன்னு பாருங்க.. -
பர்பெக்ட்டான கணவராக இருக்கும் 4 ராசிகள் இவங்கதான்... இவங்க புருஷனா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்...! -
செவ்வாயால் உருவாகும் லாப யோகம்: ஏப்ரலில் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது..
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல அழற்சி அதிகமா இருக்கு-ன்னு அர்த்தமாம்..
Inflammation Symptoms In Tamil: பொதுவாக நமது உடலின் வெளிப்புறத்தில் ஏதேனும் காயம் அல்லது அழற்சி ஏற்பட்டால், அது நம் கண்களுக்கு புலப்படும். ஆனால் நமது உடலினுள் ஏதேனும் அழற்சி அல்லது காயம் ஏற்பட்டால், அதை நமக்கு உணர்த்தும் விதமாக நமது உடல் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்படியான அறிகுறிகள் நாம் தினமும் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் போன்று இருப்பதால், பலரும் அதை புறக்கணிப்பார்கள்.
அப்படி அடிக்கடி சந்திக்கும் உடல் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கும் போது, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மெதுவாக பாதித்து, நாள்பட்ட அழற்சியாக மாறி, இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற பல்வேறு தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். கீழே உடலினுள் அழற்சி அதிகமாக இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே கவனியுங்கள்.

1. நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள்
ஒருவரது மூளையில் அழற்சி அதிகமாக இருந்தால், அதன் விளைவாக நினைவாற்றல் இழப்பு, எதிலும் கவனம் செலுத்த முடியாமை மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவை சந்திக்க நேரிடும். சில ஆய்வுகளிலும் உடலினுள் ஏற்படும் அழற்சிக்கும், மன ஆரோக்கிய பிரச்சனைகளான மன இறுக்கம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அடிக்கடி மனநிலையில் மாற்றங்களை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. குடல் பிரச்சனைகள்
வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை அடிக்கடி ஏற்படுமாயின், அது குடல் அழற்சியின் அறிகுறிகளாகும். எப்போது ஒருவரது குடல் ஆரோக்கியமாக இல்லையோ, அது தொடர்ச்சியான நோயெதிர்ப்புத் தாக்கங்களை ஏற்படுத்தி, அசௌகரியமான உணர்வையும் முறையற்ற செரிமானத்தையும் உண்டாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே செரிமான பிரச்சனைகளை தொடர்ந்து அதிகம் சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.
3. நாள்பட்ட உடல் சோர்வு
நன்கு போதுமான ஓய்வு மற்றும் தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும், மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், அது உடல் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதன் அறிகுறியாகும். நாள்பட்ட அழற்சியானது உடலின் ஆற்றல் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி, பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை சந்திக்க வைக்கிறது. எனவே காரணமின்றி உடல் சோர்வை சந்தித்தால், தாமதப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
பல ஆய்வுகளில் திடீர் உடல் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பானது உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், அந்த அழற்சியால் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஹார்மோன் சமநிலை போன்றவற்றில் ஏற்படும் இடையூறினால் இந்நிகழ்வு ஏற்படலாம் என்றும் தெரியவந்துள்ளன. எனவே காரணமின்றி எடையில் மாற்றங்களை சந்தித்தால், அதை உடனே கவனியுங்கள்.
5. சரும பிரச்சனைகள்
உடலினுள் அழற்சி அதிகம் ஏற்பட்டிருந்தால், அது முகப்பரு, அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். உடலில் ஏற்படும் ஒருவித சமநிலையின்மையின் காரணமாகவே இந்நிலை தோன்றுகிறது. அதுவும் நாள்பட்ட அழற்சியானது ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தி, காலப்போக்கில் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று 'மயோ கிளினிக்' குறிப்பிட்டுள்ளது. எனவே சரும பிரச்சனைகளை தொடர்ந்து அதிகமாக சந்தித்து வந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
6. வலி மற்றும் பிடிப்புகள்
மூட்டுக்களில் தொடந்து வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். ஆர்த்ரிடிஸ் போன்ற சில நிலைமைகள் நாள்பட்ட அழற்சியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே இப்படி அதிகமாக மூட்டு வலிகள் மற்றும் மூட்டு பிடிப்புகளை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications














