Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த சத்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுங்க..
World Heart Day 2025: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளானது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் (CVDs) குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பலவற்றைத் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. ஏனெனில் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்றவற்றால் உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்ற பல்வேறு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதன் விளைவாக ஒருகட்டத்தில் இதயத்தின் ஆரோக்கியம் பாழாகி, மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆதரிக்கவும் சில சத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. இந்த சத்துக்களை முன்பெல்லாம் உணவுகளின் மூலம் மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போதைய மருத்துவ துறையில், சத்துக்களானது கேப்ஸ்யூல் அல்லது மாத்திரை வடிவில் விற்கப்படுகிறது. இதில் வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்றவை மிகவும் பிரபலமான சப்ளிமெண்ட்டுகளாகும்.
இன்று உலக இதய தினம் என்பதால், இதய நோய் நிபுணரான டாக்டர் டிமிட்ரி யாரனோவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் 6 சப்ளிமெண்ட்களைப் பகிர்ந்து கொண்டார். ஏனெனில் அவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்போது அந்த 6 சப்ளிமெண்ட்டுகள் எவையென்பதைக் காண்போம்.
1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (மீன் எண்ணெய்)
இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், அரித்மியா அபாயத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன் எண்ணெய் அல்லது சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் அதிகம் காணப்படும்.
2. கோஎன்சைம் Q10 (CoQ10)
கோஎன்சைம் Q10 செல்களின் ஆற்றலை ஆதரிக்கிறது மற்றும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும், குறிப்பாக இதந செயலிழப்பு நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது.
3. மக்னீசியம்
மக்னீசியம் இதய தாளம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து உடலில் குறைவாக இருந்தால் அரித்மியா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படக்கூடும்.
4. நார்ச்சத்து
கரையக்கூடிய நார்ச்சத்தானது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
5. பொட்டாசியம்
பொட்டாசியம் உடலில் சோடியத்தை சமநிலைப்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. எனவே இதய மருத்துவத்தில், நாங்கள் பொட்டாசியம் அளவை உன்னிப்பாக கண்காணிக்கிறோம். ஒருவரது உடலில் 4-5 mEq/L இருப்பது சிறந்தது.
6. வைட்டமின் டி
வைட்டமின் டி உடலில் குறைவாக இருந்தால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இந்த வைட்டமின் டி குறைவாக உள்ளவர்கள், அதைப் பெற வைட்டமின் டி சப்ளிமெண்ட்டுகளை எடுப்பதன் மூலம் மேம்படுத்தலாம்.
"முக்கியமாக எந்தவொரு சப்ளிமெண்ட்களையும் தொடங்குவதற்கு முன், அவை உங்களுக்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி, அவரது அனுமதி பெற்ற பின்னரே எடுக்க வேண்டும்" என்றும் டாக்டர் கூறியிருந்தார்.
எனவே நண்பர்களே! உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப எந்த சப்ளிமெண்ட்டுகளை எடுக்க வேண்டும் என்பதை கேட்டறிந்து வாங்கி தினமும் உட்கொண்டு வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications