Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
உலகெங்கிலும் பரவலான கோவிட் தொற்றுநோயைத் தவிர, நீண்ட காலமாக பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வரும் ஓர் பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்.
உலகெங்கிலும் பரவலான கோவிட் தொற்றுநோயைத் தவிர, நீண்ட காலமாக பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வரும் ஓர் பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். உலக சுகாதார அமைப்பு இந்த நாள்பட்ட நோய் மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளதாக கூறுகிறது. அதோடு வரும் ஆண்டுகளில் இன்னும் ஏராளமானோரை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நோயும் அபாயகரமானதோ இல்லையோ, அது உடலுக்குள் நுழைந்திருப்பதை வெளிப்படுத்த அதற்கென ஒரு வழி உள்ளது. பொதுவாக மனித உடலானது சிக்கல் நிறைந்த புத்திசாலித்தனமான இயந்திரமாக இருப்பதால், அது உடலினுள் உள்ள பிரச்சனைகளை உடனடியாகவோ அல்லது மெதுவாக அதன் மென்மையான செயல்பாட்டை அழித்துக் கொண்டே கூட வெளிப்படுத்தலாம். எனவே நாம் அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், விழிப்புடன் இருந்து கவனிக்க வேண்டும்.

டைப்-2 சர்க்கரை நோய்
சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய். செல்கள் மூலம் உடலுக்குள் குளுக்கோஸைக் கொண்டு செல்வதற்கு இன்சுலின் தான் காரணம். டைப்-2 சர்க்கரை நோயில், இந்த இன்சுலின் குறைவாக இருப்பதால், இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு, உடலில் நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கிறது.

டைப்-2 சர்க்கரை நோயின் காரணங்கள்
டைப்-2 சர்க்கரை நோய்க்கான சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
* மரபணுக்கள்
* உடல் பருமன்
* இன்சுலின் எதிர்ப்பு
* போதுமான உடலுழைப்பு இல்லாமை
இப்போது டைப்-2 சர்க்கரை நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

தாகம்
உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டு, உடலில் ஆரோக்கியமான அளவு நீர்ச்சத்தை இழக்க நேரிடும். இதன் விளைவாக தாகம் அதிகரிக்கும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது உடலில் கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

அதிக பசி
இரத்தத்தில் க்ளுக்கோஸ் போதிய அளவு இல்லாததால், உணவில் இருக்கும் க்ளுக்கோஸ் உறிஞ்சப்படுவதில் இருந்து உடல் அதை பெறுகிறது. இந்த செயல்பாட்டின் போது அதிகளவு ஆற்றல் பயன்படுத்தப்படுவதால், டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பசியுணர்வைப் பெறுகின்றனர்.

சோர்வு
உடலில் போதுமான அளவில் சர்க்கரை இல்லாததால், ஒருவர் விவரிக்க முடியாத அளவில் சோர்வடைவதுடன், அன்றாட வழக்கத்தை செய்ய முடியாத அளவில் களைப்பை அனுபவிக்கின்றனர். இப்படியான ஒரு சோர்வை ஒருவர் உணர்ந்தால், அவருக்கு டைப்-2 சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம்.

மங்கலான பார்வை
சர்க்கரை நோயாளிகளிடையே காணப்படும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று மங்கலான பார்வை. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால், கண்களில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடையக்கூடும். இதன் விளைவாகவே பார்வை மங்கலாக தெரிகிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பார்வையையே இழக்கக்கூடும்.

காயங்கள் குணமாகாமல் இருப்பது
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இரத்த ஓட்ட மண்டலம் சேதமடையும். இதனால் காயங்கள் குணமாவதற்கு தாமதமாகும். அதோடு பிற தொற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

முடிவு
ஒவ்வொரு உடலும் நோய்களுக்கு வித்தியாசமாக செயல்படுகின்றன. எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கை மற்றும் கால் வலி போன்றவையும் கவனிக்க வேண்டிய பிற அறிகுறிகளாகும். ஆகவே நீங்கள் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தால், ஒரு நிபுணரை அணுகுங்கள். மேலும், நீரேற்றத்துடன், சீரான உணவை உட்கொள்ளுங்கள் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications