ஏன் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது நல்லதென்று சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை நமக்கு தந்த ஓர் அற்புத பானம் தான் இளநீர். இத்தகைய இளநீரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதனை பருகுவதன் மூலம் நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறையும். மேலும் நம் முன்னோர்கள் இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் தான் நல்லது என்று கூறுவார்கள்.

ஏனெனில் இப்படி வெறும் வயிற்றில் குடிப்பதால், தற்போது நாம் சந்திக்கும் பல உடல்நல கோளாறுகளுக்கு மருந்து மாத்திரைகளின் உதவியின்றி குணப்படுத்த முடியும். சரி, இப்போது நம் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

இளநீரில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தால், செரிமானம் மேம்படும். அதிலும் இளநீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

உடல் எடை பிரச்சனை

உடல் எடை பிரச்சனை

இளநீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானம். இதனை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் மற்றும் கண்டதை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் தடுக்கப்படும். இதனால் உடல் எடை குறைவதோடு, சீராக பராமரிக்கப்படும். முக்கியமாக இளநீரில் சிறிது கொழுப்புக்களும் உள்ளதால், ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த அடர்த்தி மேம்படும்

இரத்த அடர்த்தி மேம்படும்

இளநீரை ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தின் அடர்த்தி 50 சதவீதம் அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இளநீர் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரக ஆரோக்கியம்

இளநீரில் உள்ள சிறுநீர்ப்பெருக்கி பண்புகள், சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக இளநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விலகி பாதுகாப்புடன் இருக்கலாம்.

தைராய்டு

தைராய்டு

இளநீர் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

நாள்பட்ட சோர்வு

நாள்பட்ட சோர்வு

எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் மேம்பட்டு, உடல் சோர்வு தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் குறைந்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why You Should Drink Coconut Water On An Empty Stomach

Here are some reasons why you should drink coconut water on an empty stomach. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter