Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா? -
கோதுமை மாவும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி செஞ்சு கொடுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்... -
புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... தோசை, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்? - டாக்டர். பிள்ளை விளக்கம் -
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்!
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Kongunadu Mutton Kuzhambu Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? பொதுவாக மட்டனை வாங்கினால் அதைக் கொண்டு குழம்பு செய்வோம். அதுவும் நீங்கள் எப்போதும் ஒரே சுவையில் தான் மட்டன் குழம்பை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் குழம்பை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் கொங்குநாட்டு மட்டன் குழம்பை செய்யுங்கள். இந்த மட்டன் குழம்பு இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஒருமுறை இந்த சுவையில் மட்டன் குழம்பை செய்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் மட்டன் குழம்பை செய்வீர்கள்.

உங்களுக்கு கொங்குநாட்டு மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாட்டு மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* தக்காளி - 1
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* மட்டன் - 750 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய் சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள்
தூளையும் சேர்த்து நன்கு கிளறி, தட்டு கொண்டு மூடி 3-4 நிமிடம் மட்டனை
வேக வைக்க வேண்டும்.
* 4 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
மசாலாவை சேர்த்து, அத்துடன் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி
கலந்து விட வேண்டும்.
* இறுதியாக குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கினால், சுவையான
கொங்குநாட்டு ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications








