Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
மட்டன் வாங்குனா.. இந்த பக்குவத்துல வெள்ளை குருமா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்...
White Mutton Kurma Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் மட்டன் வாங்கப் போகிறீர்களா? அந்த மட்டன் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் வெள்ளை மட்டன் குருமாவை செய்யுங்கள்.
இந்த இந்த மட்டன் குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, க்ரீமியாகவும் டேஸ்டியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த குருமா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாபி நன்றாக இருக்கும்.

உங்களுக்கு வெள்ளை மட்டன் குருமாவை எப்படி வேசெய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 1 இன்ச்
* ஜாவித்திரி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 20
* பாதாம் - 10 (ஊற வைத்தது)
* மல்லி - 1/4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* காய்ச்சாத பால் - 100 மிலி
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
குருமாவிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* கசூரி மெத்தி - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 100 மிலி
* பால் - 100 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் குக்கரில் மட்டனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அன்னாசிப்பூ, பட்டை, ஜாவித்திரி, பச்சை மிளகாய், இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி கலந்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8-10 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய வெங்காயத்தை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
முந்திரி, ஊற வைத்த பாதாம், மல்லி, பச்சை மிளகாய், காய்ச்சாத பால்
மற்றும் தயிரை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எணணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கசூரி மெத்தி சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே
சேர்த்து கிளறி, உயர் தீயில் வைத்து, நீர் சற்று வற்றும் வரை கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து, நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் 100
மிலி பாலை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குறைவான
தீயில் வைத்து 15-20 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி,
புதினா சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக மிளகு தூள் சேர்த்து கிளறி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து
கலந்து இறக்கினால், சுவையான வெள்ளை மட்டன் குருமா தயார்.
Image Courtesy: Ashus Delicacies



Click it and Unblock the Notifications