For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரம் ஒருமுறை சால்மன் மீனை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

|

உங்களுக்கு அசைவ உணவு பிடிக்குமா? அதிலும் மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சால்மன் மீனை வாங்கி சாப்பிடுங்கள். இது சற்று விலை அதிகமாக இருந்தாலும், இந்த மீனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி உட்கொண்டு வர உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சால்மன் மீனில் புரோட்டீன்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களுடன், இரும்புச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது. குறிப்பாக மூட்டு வலி, தூக்கமின்மை, உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், சால்மன் மீனை உட்கொள்வது மிகவும் நல்லது.

மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

சரி, இப்போது சால்மன் மீனை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

சால்மன் மீனில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சால்மன் மீனை உட்கொண்டால், அப்பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

நன்மை #2

நன்மை #2

நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தால், உங்கள் டயட்டில் சால்மன் மீனை சேர்த்துக் கொள்வதால், ஆரோக்கியமான வழியில் உடல் எடைக் குறையும். எப்படியெனில் சால்மன் மீன் பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் இலக்கை வெற்றிகரமாக அடைய உதவுகிறது.

நன்மை #3

நன்மை #3

சால்மன் மீன் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆகவே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை சால்மன் மீனைக் கொடுத்தால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

நன்மை #4

நன்மை #4

சால்மன் மீன் இதயத்திற்கு மிகவும் நல்லது. இது உடலினுள் உள்ள உட்காயங்களைக் குறைத்து, தமனிகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், இதய பிரச்சனை இருப்பவர்கள் சால்மன் மீனை சாப்பிடுவது நல்லது.

நன்மை #5

நன்மை #5

மற்ற மீன்களை விட சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இச்சத்துக்கள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இதில் ஏராளமாக உள்ளதால், இந்த மீனை உட்கொண்டு நன்மை பெறுங்கள்.

நன்மை #6

நன்மை #6

வயது அதிகரிக்கும் போது பார்வை பலவீனமாகும். ஆனால் சால்மன் மீனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என பல ஆய்வுகள் கூறுகின்றன.

நன்மை #7

நன்மை #7

சால்மன் மீனில் உள்ள ட்ரிப்டோபன், தூக்க மருந்து போன்று செயல்பட்டு, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், சால்மன் மீனை உட்கொண்டால் அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens If You Eat Salmon?

If you are a lover of seafood then make salmon your regular dish as it is packed with many nutrients. It is a good source of protein too.
Desktop Bottom Promotion