குடலை சுத்தம் செய்ய இந்த 5000 வருட பழமையான முறையை ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

கண்ட உணவுகளை உட்கொண்டு பலரும் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளோம். இதன் காரணமாக முதலில் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, உண்ணும் உணவுகள் சரியாக செரிக்காமல், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி பல்வேறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

அதுமட்டுமின்றி, குடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரிக்கும். இது அப்படியே நீடித்தால், அதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயமும் அதிகரிக்கும். எனவே அவ்வப்போது ஒருவர் தங்களது குடலை சுத்தம் செய்ய முயல வேண்டும்.

குடலை சுத்தம் செய்ய உணவுகள், பானங்கள் மட்டுமின்றி, அக்குபிரஷர் முறையினாலும் முடியும். இங்கு அக்குபிரஷர் முறைக் கொண்டு குடலை சுத்தம் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுத்தம் கொடுக்கும் இடம்

அழுத்தம் கொடுக்கும் இடம்

தொப்புள் மற்றும் அந்தரங்க எலும்பிற்கு இடைப்பட்ட பகுதி தான் "ஆற்றல் கடல்" என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்தால், செரிமான பிரச்சனை மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குணமாகும் என நம்பப்படுகிறது,

சீன மருத்துவம்

சீன மருத்துவம்

சீன மருத்துவத்தில் இந்த சக்தி வாய்ந்த அக்குபிரஷர் புள்ளியை கைவிரல் அல்லது ஊசியால் அழுத்தம் கொடுக்கும் போது, அது உடல் முழுவதுமாக சீரான ஆற்றலை வழங்கும். இதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம், செரிமான மண்டலம், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி, அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

முக்கியமாக இப்பகுதியில் அழுத்தம் கொக்கும் போது, வயிற்று உப்புசம், மாதவிடாய் கால வயிற்று வலி, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்புபோக்கு போன்றவை சரியாகும்.

அழுத்தம் கொடுப்பது எப்படி?

அழுத்தம் கொடுப்பது எப்படி?

ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலை ஒன்றாக ஒட்டி, தொப்புளுக்கு கீழே வைத்து, மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி அழுத்தம் கொடுக்கும் போது, ஆழமாக மூச்சு விட வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் தூண்டப்படும்.

இப்படி கொடுக்கப்படும் அழுத்தத்தை, நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, ஏன் படுத்துக் கொண்டோ கூட செய்யலாம்.

பாலுணர்வு அதிகரிக்கும்

பாலுணர்வு அதிகரிக்கும்

இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து வந்தால், உடலுறவின் போது பாலுணர்வு அதிகம் தூண்டப்பட்டு, எளிதில் உச்சக்கட்ட இன்பம் காண உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This 5000 Years Old Technique To Clean Your Intestines

If you have Problems with the Intestines, it is Best to Try this 5000 Years Old Technique to Clean your Intestines. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter