இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் தான். நமது செயல்கள் தான் நம் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றன. பொதுவாக உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தால் தான், உடல் நன்கு செயல்படும். அந்த ஓய்வைத் தூக்கம் வழங்கும்.

நிம்மதியான தூக்கம் வேண்டுமெனில் இரவில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள்!

ஆனால் இரவில் நாம் செய்யும் சில தவறுகளால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகிறது என்பது தெரியுமா? அதிலும் அந்த செயல்கள் யாவும் அன்றாடம் நாம் மேற்கொள்பவையே.

இரவு இந்த உணவுகளை பாலில் கலந்து குடித்து வந்தால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்!!

இங்கு இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்யக்கூடாத 5 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அவற்றைத் தவிர்த்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்நாக்ஸ் சாப்பிடுவது

ஸ்நாக்ஸ் சாப்பிடுவது

படுக்கைக்கு முன் எந்த ஒரு உணவை உட்கொண்டாலும், அதனால் உடலுறுப்புக்கள் ஓய்வின்றி இரவிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படி ஓய்வின்றி உடலுறுப்புக்கள் செயல்பட்டால், நாளடைவில் அது பழுதடையக்கூடும். எனவே இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொள்ளுங்கள்.

டிவி பார்த்துக் கொண்டே தூங்குவது

டிவி பார்த்துக் கொண்டே தூங்குவது

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு தாமதமாக வரும் போது, ரிலாக்ஸ் செய்வதற்கு டிவி பார்ப்போம். இப்படி டிவி பார்க்கும் போது, அதிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம், உடலில் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்து, நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே இரவில் டிவி பார்ப்பதையோ அல்லது மொபைலை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதையோ தவிர்த்திடுங்கள். அதுவும் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பே டிவியை அணைத்துவிடுங்கள்.

ஆல்கஹால் பருகுவது

ஆல்கஹால் பருகுவது

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமென்று ஆல்கஹால் பருகுவோர் அதிகம். ஆனால், உண்மையில் ஆல்கஹால் பருகினால் தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டு, உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்காமல் போகும். என்ன தான் இரவில் ஆல்கஹால் பருகி தூங்கினாலும், நடு ராத்திரியில் ஒருமுறையாவது கழிவறை செல்ல வேண்டி வந்து, தூக்கத்தில் இடையூறு ஏற்படும். பின் மறுநாள் காலையில் நீங்கள் மிகுதியான களைப்பை உணரக்கூடும்.

உடற்பயிற்சி செய்வது

உடற்பயிற்சி செய்வது

உடற்பயிற்சி ஆரோக்கியமான ஒன்று தான். ஆனால் அதனை இரவில் தூங்குவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே செய்து முடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சியின் போது இதயம், மூளை மற்றும் தசைகள் மிகவும் கடுமையாக வேலை செய்யும். இந்நேரத்தில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.

பகலில் நீண்ட நேரம் தூங்குவது

பகலில் நீண்ட நேரம் தூங்குவது

பகலில் தூக்கம் வந்தால், 30 நிமிடத்திற்கு மேல் தூங்க வேண்டாம். ஏனெனில் 30 நிமிடத்திற்கு மேல் பகலில் அதிலும் மாலையில் தூக்கத்தை மேற்கொண்டால், அதனால் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டியிருக்கும். பின் இரவில் தாமதமாக தூங்கி, காலையில் அலுவலகத்திற்கு செல்ல எழும் போது மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Five Health Mistakes Made at Night

One of the easiest ways to sabotage your health is by not getting enough sleep. However, the night time is when you often feel the least resistance to things you know aren’t healthy. Here are 5 mistakes to avoid at night.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter