மதியம் உணவு உட்கொண்டதும் கட்டாயம் செய்யக்கூடாத 10 செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உண்ணும் உணவுகளால் பலனைப் பெற வேண்டுமானால், உணவு உண்ட பின் செய்யும் பழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் நம்மில் பலர் உணவு உண்ட பின் செய்யக்கூடாத செயல்களை அறியாமல் செய்து வருகின்றனர்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்து வந்தால், உண்ட உணவின் முழு நன்மையையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

பொதுவாக சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் ஒரு சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும் 60 கார்சினோஜென்களைக் கொண்டிருக்கும். மேலும் இதில் நிக்கோட்டின், டார் போன்றவையும் உள்ளது.

இத்தகைய சிகரெட்டை உணவு உட்கொண்டதும் பிடித்தால், அது 10 சிகரெட்டைப் பிடித்ததற்கு சமம். எனவே இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

பழங்கள்

பழங்கள்

உணவு உட்கொண்ட பின் பழங்களை சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். பழங்களை சாப்பிட சிறந்த நேரம் என்றால் அது காலை வேளையில் தான்.

சூடான டீ

சூடான டீ

டீயில் உணவில் உள்ள எசன்ஸை உறிஞ்சும் பொருள் உள்ளது. அதுவும் டீயில் உள்ள டானின் என்னும் பொருள், உண்ட உணவில் உள்ள புரோட்டீனை உடல் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் டீயை ஒருவர் உணவு உட்கொண்டதும் குடித்தால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

குளிர்ச்சியான நீரை உணவு உட்கொண்ட பின் குடித்தால், உண்ட உணவு செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எனவே குளிர்ச்சியான நீரைக் குடிப்பதைத் தவிர்த்து, சூடான நீரைக் குடியுங்கள். இதனால் உணவில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

தூக்கம்

தூக்கம்

உணவு உண்டதும் தூங்கினால், இரைப்பையில் உற்பத்தியாகும் செரிமான நீர் அப்படியே உணவுக்குழாய் வழியே மேலே எழும்பி, நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே இப்பழக்கத்தையும் கைவிட வேண்டியது அவசியம்.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

உணவு உட்கொண்ட 10-20 நிமிடத்திற்கு பின் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடலுக்கு நல்ல மற்றும் ஆற்றலும் எரிக்கப்படும். ஆனால் உணவு உண்ட உடனேயே நடந்தால், உடல் உணவை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும்.

குளியல்

குளியல்

உணவு உண்டதும் குளித்தால், வயிறு மற்றும் செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அவற்றில் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.

நடனம்

நடனம்

வயிறு நிறைய உணவு உட்கொண்டதும் நடனம் ஆடினால், குடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவது தடுக்கப்படும்.

பெல்ட்டை தளர்த்துவது

பெல்ட்டை தளர்த்துவது

உணவு எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதை அளவாகத் தான் சாப்பிட வேண்டும். இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டை தளர்த்திவிட்டு அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

உணவுக்கு முன் நீர்

உணவுக்கு முன் நீர்

உணவு உண்பதற்கு முன் நீரைக் குடித்தால், அது உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Things That Should Not Be Done After Your Meals

Here are top 10 things that should not be done after your meals. Read on to know more...
Story first published: Wednesday, October 5, 2016, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter