இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையைத் தான் ஹைப்பர் க்ளைசீமியா என்று அழைப்பர். ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் உயிருக்கே உலை வைக்கும்படி சிறுநீரகம், மூளை, கண்கள், கால்கள், பாதம் போன்றவை பாதிக்கப்படும்.

ஆகவே ஒருவர் தங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது மிகவும் அவசியம். இங்கு ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் தென்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் வறட்சி

வாய் வறட்சி

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் உடல் வறட்சி அடையக்கூடும். உடல் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதன் முதல் அறிகுறியாக வாய் வறட்சி அதிகமாக இருக்கும். எனவே வாய் வறட்சி அதிகமாக இருந்தால், சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.

தாகம் அதிகரிக்கும்

தாகம் அதிகரிக்கும்

உடல் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதனால் தாகமும் அதிகம் எடுக்கும். ஆகவே உங்களுக்கு சாதாரணமாக தாகம் எடுப்பதை விட, அதிகமாக தாகம் எடுத்தால், உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

உடல் சோர்வு

உடல் சோர்வு

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கும் போது, மிகுந்த சோர்வையும், எதையும் செய்ய முடியாத அளவில் உடல் பலவீனத்துடன் இருப்பதை உணரக்கூடும்.

தலைவலி

தலைவலி

அடிக்கடி தலைவலி வந்தால், அதற்கு ஓர் காரணம் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக தலைவலியை உண்டு பண்ணும்.

மங்கலான பார்வை

மங்கலான பார்வை

தலைவலி மற்றும் மங்கலான பார்வை ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் இருந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

அடிக்கடி சிறுநீர்

அடிக்கடி சிறுநீர்

அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுகிறதா? இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் தான், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs Of High Blood Sugar Or Hyperglycemia You Should Know!

There are few signs that can tell you that your blood sugar has gone haywire. Read on to know more...
Story first published: Tuesday, June 7, 2016, 17:47 [IST]
Subscribe Newsletter