சோடியம் குறைபாடு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் இரத்த அழுத்தம் சீராக இருக்கவும், நரம்பு செல்கள் மற்றும் தசைகளின் முறையான செயல்பாட்டிற்கும் சோடியம் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சோடியம் வயிற்றுப் போக்கு, உடல் வறட்சி, கல்லீரல் நோய்கள், இதய பிரச்சனைகள் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்றவை உடலில் சோடியத்தின் அளவைக் குறையச் செய்யும்.

உங்கள் உடலில் கால்சியம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

சரி, இப்போது ஒருவரது உடலில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடலில் சோடியத்தின் அளவை சீராகப் பராமரித்து வாருங்கள்.

நீங்கள் தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநிலை பிரச்சனை

மனநிலை பிரச்சனை

நீங்கள் சில நாட்களாக மிகுந்த சோர்வு மற்றும் குழப்பத்தில் இருந்தால், உங்கள் உடலில் சோடியம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் மன பிரமைகள் மற்றும் எரிச்சலை உணரலாம்.

இரையகக்குடலிய இடர்பாடு

இரையகக்குடலிய இடர்பாடு

உடலில் சோடியம் மிகவும் குறைவாக இருந்தால், பசியின்மையுடன், குமட்டல் மற்றும் வாந்தி உணர்வை அனுபவிக்கக்கூடும். பொதுவாக வாந்தி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக சோடியம் குறைபாடு தான் இருக்கும். இம்மாதிரியான நிலை தீவிரமாவதற்குள் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.

தசை பிரச்சனைகள்

தசை பிரச்சனைகள்

சோடியம் குறைபாடு இருந்தால், தசைப்பிடிப்புகள், சுளுக்கு போன்றவை அடிக்கடி ஏற்படும். வலிப்பு மற்றும் தசை பலவீனம் கூட சோடியம் குறைபாட்டிற்கான அறிகுறிகளாகும்.

ஓய்வின்மை

ஓய்வின்மை

இரத்தத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் போது, ஓய்வே இல்லாதது போன்று உணரக்கூடும்.

தலைவலி

தலைவலி

தலைவலியும் உடலில் சோடியம் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே உங்களுக்கு அடிக்கடி காரணமே இல்லாமல் தலைவலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs And Symptoms Of Sodium Deficiency You Should Be Aware Of

Here are some signs and symptoms of sodium deficiency. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter