எலும்புகளை இயற்கை வழியில் வலிமையாக்க இத ஃபாலோ பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் வளர வளர எலும்புகள் வளர்வதோடு, வலிமையடையும். ஆனால் 25 வயதைக் கடந்த பின், எலும்புகளின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, நமது மோசமான பழக்கவழக்கங்களால் எலும்புகள் வலிமை இழக்க ஆரம்பித்து, போதிய கால்சியம் சத்து கிடைக்காமல் நாளடைவில் அது உடைய ஆரம்பிக்கும்.

மேலும் எலும்புகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இவையெல்லாம் ஏற்படாமல், எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க கீழே கொடுக்கப்பட்ட சில டிப்ஸ்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

ஆரம்பத்திலேயே உடல் எடையின் மீது அக்கறை காட்டுங்கள். தற்போது 35 வயதை எட்டும் போதே, நிறைய பேர் எலும்பு சம்பந்தப்பட்ட பல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். ஆகவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

எலும்புகளை கால்சியம் என்னும் சத்து தான் வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். ஆனால் இத்தகைய கால்சியம் சத்தை உறிஞ்ச வைட்டமின் டி அவசியம். இந்த வைட்டமின் டி சூரியக் கதிர்கள், முட்டை, ஆரஞ்சு ஜூஸ், மீன் அல்லது வைட்டமின் டி மாத்திரைகளின் மூலம் கிடைக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை உடனே கைவிட வேண்டும். இந்த பழக்கங்கள் எலும்புகளை தேய்மானமடையச் செய்யும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

கால்சியம் நிறைந்த உணவுகளான தயிர், சீஸ், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதோடு, பாதாம், மீன் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

தினமும் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆகவே ரன்னிங், நடனம், ஏரியோபிக்ஸ் போன்றவற்றில் தினமும் ஈடுபடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

உணவில் அளவுக்கு அதிகமாக உப்பை சேர்க்க வேண்டாம். ஏனெனில் உப்பு கால்சியம் இழப்பை ஏற்படுத்தும். எனவே உப்பு அதிகம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

வயது அதிகரிக்கும் போது காபி மற்றும் இதர காப்ஃபைன் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். இது நேரடியாக எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்காவிட்டாலும், உடல் நல நிபுணர்கள் காப்ஃபைன் எடுப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Ways To Strengthen Bones Naturally

How to strengthen bones? After crossing 25 years of age, bone development tends to slow down. So, read on to know some tips for strong bones.
Story first published: Tuesday, August 23, 2016, 14:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter