For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் முலாம் பழம் சாப்பிடுவது நல்லது எனத் தெரியுமா?

By Maha
|

கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் முலாம் பழம். தர்பூசணியைப் போன்றே முலாம் பழத்திலும் நீர்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இப்பழத்தை உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சியடையும். ஆனால் பலருக்கு இப்பழத்தினை உண்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முலாம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அப்பழத்தை வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

முலாம் பழத்தில் நார்ச்சத்துக்களும், நீர்ச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும்

நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும்

முலாம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள வெள்ளையணுக்களைத் தூண்டி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கண் ஆரோக்கியம்

கண் ஆரோக்கியம்

முலாம் பழத்தை தொடர்ச்சியாக உட்கொண்டு வருவது கண்களுக்கு நல்லது. மற்றும் முலாம் பழம் கண் புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன்கள் அதிகம் உள்ளது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

முலாம் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது இரத்த அழுத்தத்தை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தடுக்கும்.

எடை குறைய உதவும்

எடை குறைய உதவும்

முலாம் பழத்தில் கொழுப்புக்கள் சுத்தமாக இல்லை. மேலும் எளிதில் உடையக்கூடிய அளவிலான நல்ல கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

சர்க்கரை நோய் கட்டுப்படும்

சர்க்கரை நோய் கட்டுப்படும்

முலாம் பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, சர்ச்சரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

அல்சர்

அல்சர்

அல்சர் பிரச்சனையை இப்பழம் சரிசெய்யும். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

முலாம் பழத்தில் உள்ள ஆக்ஸிகைன் என்னும் பொருள் சிறுநீரக கற்களைக் கரைப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால் சிறுநீரகங்களும் சுத்தமாகும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

முலாம் பழம் தசைகள் மற்றும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

முலாம் பழத்தில் உள்ள அடினோசைன் என்னும் இரத்தம் உறைவதைத் தடுக்கும் பொருள், இதய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know Why Muskmelon Is Good For Health!

Do you know why muskmelon is good for health? Here are some health benefits of muskmelon.
Story first published: Saturday, April 2, 2016, 15:27 [IST]
Desktop Bottom Promotion