ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

முன்பெல்லாம் 45-50 வயதிற்கு மேல் தான் மூட்டு வலிகள் வரும். ஆனால் இக்காலத்தில் 35 வயதை எட்டும் போதே மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. இதற்காக பலர் ஆரம்பத்தில் வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் அது தற்காலிகமாக வலியைப் போக்குமே தவிர, நிரந்தர தீர்வை வழங்காது.

If You Have Joint, Arthritis, Osteoporosis or Rheumatism Problems Try This Amazing Remedy!

அதுமட்டுமின்றி, பலர் இப்பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று, ஒரு நாளைக்கு 10 மாத்திரைகள் வரை சாப்பிடுவார்கள். இப்படி மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால், அதனால் மூட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லை, அதனால் பக்க விளைவுகளை மட்டும் தவறாமல் சந்திப்போம்.

எனவே இதைத் தவிர்க்க தமிழ் போல்ட் ஸ்கை ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் ஓர் எளிய இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் விரைவில் நல்ல பலனைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெலாட்டின்

ஜெலாட்டின்

ஜெலாட்டின் என்பது விலங்குகளின் உடலில் உள்ள தசை நாண்கள், எலும்பு, குருத்தெலும்பு மற்றும் கொலாஜென் சிதைவால் பெறப்படும் உணவுப் பொருளாகும்.

அன்றாட உணவுகள்

அன்றாட உணவுகள்

இந்த ஜெலாட்டின் நம்மில் பலர் விரும்பி சாப்பிடும் ஜெல்லி மற்றும் சூயிங் கம் போன்றவற்றில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஜெலாட்டின் பவுடராகவும் கடைகளில் விற்கப்படுகிறது. அதை வாங்கியும் சாப்பிடலாம். இதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இங்கு ஜெலாட்டின் பவுடரை எப்படி பயன்படுத்தினால், ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெலாட்டின் மருந்து தயாரிக்கும் முறை

ஜெலாட்டின் மருந்து தயாரிக்கும் முறை

நல்ல தரமான ஜெலாட்டின் பவுடரை வாங்க வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் ஜெலாட்டின் பவுடரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். வேண்டுமானால் இந்த பவுடரை ஒரு டம்ளர் தயிர் அல்லது நற்பதமான பழச்சாறுகளில் கலந்தும் குடிக்கலாம்.

எப்போது சாப்பிட வேண்டும்?

எப்போது சாப்பிட வேண்டும்?

இதனை தினமும் இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால், ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தீவிர நிலையில் இருந்தால், தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

எவ்வளவு காலம் சாப்பிட வேண்டும்?

எவ்வளவு காலம் சாப்பிட வேண்டும்?

இந்த ஜெலாட்டின் சிகிச்சையை 4-6 வாரத்திற்கு தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If You Have Joint, Arthritis, Osteoporosis or Rheumatism Problems Try This Amazing Remedy!

If you have joint, arthritis, osteoporosis or rheumatism problems try this amazing remedy. Read on to know more...
Story first published: Saturday, November 5, 2016, 12:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter