Latest Updates
-
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
கோதுமை மாவும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி செஞ்சு கொடுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Onion Stuffed Paratha Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ஒருவேளையாவது சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி வெறும் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கிரேவி, குருமா, மசாலா என்று செய்து சாப்பிடுவீர்களா? இப்படி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை சப்பாத்திக்கு ஒரு ஸ்டப்பிங் செய்து ஸ்டஃப்டு பராத்தாவை செய்யுங்கள்.
அதுவும் ஸ்டஃப் செய்ய வீட்டில் காய்கறி எதுவும் இல்லை என்றால், கவலை வேண்டாம். வெங்காயமும், பொட்டுக்கடலையும் இருந்தாலே போதும், அருமையான ஸ்டஃப்பிங் செய்யலாம். இந்த வெங்காய ஸ்டஃப்டு பராத்தாவிற்கு வெறும் தேங்காய் சட்னி சைடு டிஷ்ஷாக இருந்தாலே போதும். இல்லாவிட்டால் வெறுமனே கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு வெங்காய ஸ்டஃப்டு பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய ஸ்டஃப்டு பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி மாவிற்கு...
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன் + சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
அரைத்து பொடிப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* சோம்பு - 1 சிட்டிகை
மசாலா வதக்குவதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை பொடி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் சிறிது
உப்பு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு
நன்கு மென்மையாக பிசைய வேண்டும். பின் அதன் மேல் சிறிது நெய் தடவி
மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு பற்கள் மற்றும் 1
சிட்டிகை சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்
தூள் மற்றும் சுவைக்கேறப் உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு
3 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை பொடியை சேர்த்து 1
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி நன்கு குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, லேசாக
தேய்த்து, நடுவே சிறிது மசாலாவை வைத்து மடித்து, மசாலா வெளியே
வராதவாறு மீண்டும் தேய்க்க வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தேய்த்து
வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், சுவையான வெங்காய ஸ்டஃப்டு பராத்தா தயார்.



Click it and Unblock the Notifications