Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ப்ராக்கோலியும், பன்னீரும் இருந்தா.. ஒருடைம் இந்த பராத்தா செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Broccoli Paneer Paratha Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி வெறும் சப்பாத்தியை செய்து, அதற்கு தனியாக சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் அவ்வப்போது பராத்தாக்களை செய்யுங்கள்.
அதுவும் உருளைக்கிழங்கு கொண்டு ஆலு பராத்தாவை மட்டும் செய்யாமல், ப்ராக்கோலி மற்றும் பன்னீர் மசாலாவை தயாரித்து, அதைக் கொண்டும் பராத்தா செய்யுங்கள். இந்த ப்ராக்கோலி பன்னீர் பராத்தாவிற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை, வெறுமனே கூட சாப்பிடலாம். முக்கியமாக இந்த பராத்தாவை குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்து அனுப்பலாம்.

உங்களுக்கு ப்ராக்கோலி பன்னீர் பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி பன்னீர் பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - சிறிது
* பன்னீர் - 100 கிராம்
* நெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - காரத்திற்கு ஏற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* சப்பாத்தி மாவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ப்ராக்கோலியை சுடுநீரில் 2-3 நிமிடம் போட்டு ஊற வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ப்ராக்கோலியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு,
பிளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பன்னீரை துருவி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த ப்ராக்கோலியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து
உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி, பன்னீருடன் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்,
சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் சாட்
மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்னர் சப்பாத்தி மாவை எடுத்து, அதை தட்டையாக லேசாக தேய்த்து,
நடுவே சிறிது ப்ராக்கோலி பன்னீர் கலவையை வைத்து மடித்து, மென்மையாக
தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து சப்பாத்தி மாவையும்
பராத்தாக்களாக செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள பராத்தாக்களை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி
முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான ப்ராக்கோலி
பன்னீர் பராத்தா தயார்.



Click it and Unblock the Notifications