கரும்புச் சாறு குடித்தால் உண்டாகும் நன்மைகளை அறிவீர்களா?

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

கரும்பு தின்ன யாருக்காவது கசக்குமா? கரும்பு போல இனிக்கும் சுவை வேறெதுவும் உண்டா என தெரியவில்லை. வருட ஆரம்ப மாதத்தை நாம் கரும்பில் தான் தொடங்குகின்றோம். 70 சதவீதம் சர்க்கரை கரும்பிலிருந்துதான் பிரித்தெடுக்கப்படுகிறது. மீதி 30 % பீட்ரூட் இனிப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

உலகில் ப்ரேசிலுக்கு அடுத்ததாக , இந்தியாவில்தான் கரும்பு விளைகிறது. கரும்பிலிருந்து முதலில் பிரித்தெடுக்கப்படுவது வெல்லம். அதன் பின் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கிறார்கள். இறுதியாக எஞ்சியவற்றில்தான், சில கெமிக்கல் மற்றும் சல்ஃபர் கலந்து வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.

இதில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது. வெள்ளைச் சர்க்கரையில் கெமிக்கல் கலந்த குளுகோஸ் மட்டுமே அதிகம் உள்ளது.
இனி கரும்பின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரும்பிலுள்ள சத்துக்கள் :

கரும்பிலுள்ள சத்துக்கள் :

கரும்பில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம் போன்ற முக்கியமான மினரல்கள் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளன. இவை நீழப்பு உடலில் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்யும் :

நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்யும் :

இது நோய் எதிர்ப்பு செல்களுக்கு ஊட்டம் அளிக்கின்றது. சாதரண ஜலதோஷம், காய்ச்சல் வராதவாறு பாதுகாக்கிறது. உடலுக்கு தேவையான சூட்டினை தருகிறது.

பற்களை பாதுகாக்கும் :

பற்களை பாதுகாக்கும் :

கரும்பு அதிகமான மினரல்களைக் கொண்டுள்ளது. இவை பற்சொத்தையை தடுக்கின்றன. வாய் துர்நாற்றத்தை போக்கும்.

சிறு நீரகம் மற்றும் கல்லீரலுக்கு நலம் தரும் :

சிறு நீரகம் மற்றும் கல்லீரலுக்கு நலம் தரும் :

இது சிறு நீரகக் கற்களை கரைக்கச் செய்யும். சிறுநீர் தொற்றை குணப்படுத்தும். கல்லீரலுக்கு பலம் தருகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகவும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள்.

மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தினை சரிப்படுத்தும் :

மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தினை சரிப்படுத்தும் :

இது குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மலச்சிக்கலை நீக்கும். இதிலுள்ள உப்புத்தன்மை, உடலில் உண்டாகும் அதிக அமிலத்தன்மையை சமன் செய்யும். இதனால் ஏற்படும் அசிடிட்டி, அஜீரணத்தை, குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

சர்க்கரை வியாதிக்கு நல்லது :

சர்க்கரை வியாதிக்கு நல்லது :

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது என கூருவார்கள். இதனால் கரும்பினை தவிர்ப்பார்கள். ஆனால் கரும்பு சாப்பிடலாம். ஏனெனில் இதிலுள்ள குளுகோஸின் செயல்பாடு குறைந்த அளவே இருப்பதால், இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்காது என ஆய்வுகள் கூறுகின்றதாம்.

சக்தி தரும் கரும்புச் சாறு :

சக்தி தரும் கரும்புச் சாறு :

உடலில் சக்தி இல்லாத போது, குறிப்பாக வெய்யில் காலங்களில் அதிக வியர்வையாலும், சூட்டாலும், உடல் சோர்வடையும். அது மாதிரியான சமயங்களில் கரும்புச் சாறு உடனடி எனர்ஜி தரும். இதிலுள்ள கார்போஹைட்ரேட், புரோட்டின், இரும்புச்சத்து எல்லாம் கலந்து ஒருசேர உங்களுக்கு கிடைக்கப் பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Important health benefits of sugarcane juice

Important health benefits of sugarcane juice
Please Wait while comments are loading...
Subscribe Newsletter