For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் ஜப்பானிய முறை பற்றி தெரியுமா?

|

மனித உடலை நச்சுப் பொருட்கள் தான் பாதிக்கின்றன. இந்த நச்சுப் பொருட்களானது உண்ணும் உணவுகள் வழியாகவும், குடிக்கும் நீரின் வழியாகவும், சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், ஏன் உடுத்தும் உடையின் மூலமும் உடலினுள் நுழைகின்றன.

உடலில் நச்சுக்களின் அளவு அதிகமானால், உடலின் மெட்டாலிசம் பாதிக்கப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்.

இங்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஓர் அற்புதமான மற்றும் எளிமையான வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து, உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபூட் பேட் (Foot Pad)

ஃபூட் பேட் (Foot Pad)

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற நச்சு நீக்கும் ஃபூட் பேட் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபூட் பேட் முறை ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஃபூட் பேடை இரவில் படுக்கும் முன் பாதங்களில் ஒட்டி, மறுநாள் காலையில் அதை நீக்க வேண்டும். அப்படி நீக்கும் போது, தீங்கு விளைவிக்கும் நச்சுக்களானது கருப்பாக வெளியேறுவதைக் காணலாம்.

வேறு சில நன்மைகள்

வேறு சில நன்மைகள்

இந்த ஃபூட் பேடுகளைப் பயன்படுத்துவதால், வேறுசில நன்மைகளும் கிடைக்கும். அதில் தலைவலி, உடல் களைப்பு போன்றவை குறைந்திருப்பதோடு, இதுவரை இருந்த மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் கிடைத்திருப்பதை உணர்வீர்கள்.

நச்சு நீக்கும் ஃபூட் பேட் எங்கு கிடைக்கும்?

நச்சு நீக்கும் ஃபூட் பேட் எங்கு கிடைக்கும்?

உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கும் ஃபூட் பேடை மருந்து கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே தயாரிக்கலாம்.

வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* தண்ணீர்

* வெங்காயம்

* பூண்டு

* சாக்ஸ் மற்றும் ஒட்டும் காஸ் பேட் (Self-Stick Gauze Pad)

செய்யும் முறை

செய்யும் முறை

* முதலில் வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, 30 நிமிடம் குளிர வைத்து, காஸ் பேடின் நடுவில் ஊற்ற வேண்டும். காஸ் பேடில் அதிகளவு நீர் இருந்தால், அதை பிழிந்து வெளியேற்றிவிட வேண்டும்.

* முக்கியமாக இச்செயலை செய்யும் போது ஒட்ட உதவும் பசை மிகுந்த இடம் ஈரமாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

இப்போது செய்து வைத்துள்ள அந்த நேச்சுரல் நச்சு நீக்கும் ஃபூட் பேடை, இரவில் படுக்கும் முன் கால் பாதத்தின் நடுவில் ஒட்டி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் அதை நீக்க வேண்டும்.

எவ்வளவு நாள் செய்ய வேண்டும்?

எவ்வளவு நாள் செய்ய வேண்டும்?

இந்த நேச்சுரல் நச்சு நீக்கும் ஃபூட் பேடை நல்ல மாற்றம் காணும் வரை பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Remove All Harmful Toxins From Your Body - Naturally!

Read this article carefully and find out how to naturally detox your body in a pretty simple and gentle way.
Desktop Bottom Promotion