தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எனவே உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் அவஸ்தைப்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்புக்கள் கரையும்

கொழுப்புக்கள் கரையும்

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

எலும்புகள் ஆரோக்கியமாகும்

எலும்புகள் ஆரோக்கியமாகும்

எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

புற்றுநோய்

புற்றுநோய்

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு தணியும்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.

நீரிழிவு

நீரிழிவு

தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

கண்கள்

கண்கள்

கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.

இரைப்பை கோளாறுகள்

இரைப்பை கோளாறுகள்

நெல்லிக்காய் ஜூஸ் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இதயம்

இதயம்

நெல்லிக்காய் ஜூஸ் இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான இரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி, பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

நெல்லிக்காய் தூக்கமின்மையைப் போக்கும். அதிலும் நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், அது வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்யும். மேலும் வாயில் புண் இருந்தாலும் அதனை நெல்லிக்காய் ஜூஸ் குணமாக்கும்.

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்

நாள்பட்ட மலச்சிக்கல் இருந்தால், நெல்லிக்காய் ஜூஸ் பருகுங்கள். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் பைல்ஸ் பிரச்சனை உள்ளோருக்கும் மிகவும் நல்லது.

இரத்தம் சுத்தமாகும்

இரத்தம் சுத்தமாகும்

நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.

மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா

மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா

நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் நாள்பட்ட இருமல், காசநோய் போன்றவையும் மெதுவாக குணமாக ஆரம்பிக்கும்.

மூட்டு அழற்சி

மூட்டு அழற்சி

நெல்லிக்காயில் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. எனவே இந்த ஜூஸை தினமும் பருகி வருவதன் மூலம், மூட்டுகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைந்து ஆர்த்ரிடிஸ் பிரச்சனை குறையும்.

சரும அழகு மேம்படும்

சரும அழகு மேம்படும்

முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Drinking Amla Juice In Empty Stomach

Here are some health benefits of drinking amla juice in empty stomach. Read on to know more...