மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது குடிக்கக்கூடாத ஜூஸ்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் உடலில் நோய்களின்றி இருப்போர் மிகவும் குறைவு. ஒவ்வொருவரும் உடலில் ஏதேனும் ஒரு சிறு பிரச்சனையால் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். மேலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தினமும் மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டியிருக்கும்.

அப்படி மருந்து மாத்திரைகளை எடுப்போரில் பலர் நீரை பயன்படுத்தினாலும், இன்னும் சிலர் டீ, காபி அல்லது ஜூஸ்களைக் கொண்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒருசில ஜூஸ்களுடன் மாத்திரைகளை எடுத்தால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இங்கு மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது குடிக்கக்கூடாத ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பளிமாஸ் ஜூஸ்

பப்பளிமாஸ் ஜூஸ்

உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் அல்லது ஏற்றத்தாழ்வுள்ள இதய துடிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளிமாஸ் ஜூஸை அதிகாலையிலோ அல்லது மாத்திரையுடனோ எடுக்க வேண்டாம். ஆய்வுகளில் இப்பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, பப்பாளிமாஸ் ஜூஸைக் குடித்தால், அது எதிர்விளைவை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ்

இதய பிரச்சனைகளுக்கு மாத்திரைகளை எடுப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் உடன் எடுக்காதீர்கள். இது எதிர்வினைப் புரிந்து, அது நிலைமையை மோசமாக்கும். ஆய்வுகளிலும், கிரான்பெர்ரி ஜூஸில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் உட்பொருட்கள், மாத்திரையில் உள்ள இரத்தம் உறையும் பண்பைத் தாக்குவது தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸும் மாத்திரைகளின் சக்தியைப் பாதிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாத்திரைகளை ஆப்பிள் ஜூஸ் உடன் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசி ஜூஸ்

இரத்தத்தை மெலிய வைக்கும் மாத்திரைகளை எடுப்பவர்கள், அன்னாசி ஜூஸ் உடன் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அன்னாசியில் உள்ள புரோமெலைன் இரத்தம் உறையும் பண்பைப் பாதிக்கும். மேலும் புரோமெலைன் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் மயக்க மருந்து பண்பையும் தாக்கும். எனவே மன இறுக்கத்திற்கு மாத்திரைகளை எடுப்பவர்கள், அன்னாசி ஜூஸ் உடன் எடுக்காதீர்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

காலையில் மாத்திரைகளை எடுப்பவர்கள், காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஆரஞ்சு ஜூஸில் உள்ள சிட்ரஸ் அமிலம், மருந்துகளின் தன்மையைப் பாதித்து, அதனால் எதிர்விளைவை உண்டாக்குவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fruit Juices You Should NOT Have With Medicines

If you have a habit of taking your medicines during breakfast along with some fruit juices, it could lead to a medicine reaction. Read on to know more...
Story first published: Monday, August 22, 2016, 16:52 [IST]