Latest Updates
-
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்!
நீங்க வாயை திறந்துகிட்டே தூங்குவீங்களா? அப்ப முதல்ல இத படிங்க...
வாயை திறந்து தூங்கும் பழக்கத்தைக் கொண்டவரா? அப்ப நீங்க எவ்வளவு பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தூங்கும் போது பெரும்பாலானோர் வாயை திறந்தவாறு தூங்குவார்கள். வேண்டுமென்றே யாரும் அப்படி தூங்குவதில்லை. இருப்பினும் இப்படி வாயைத் திறந்தவாறு தூங்குவதால் தான், தூங்கி எழுந்த பின் அனைவரது வாயும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

வாயை திறந்தவாறு தூங்கும் போது, பாதுகாப்பை வழங்கும் எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது. இது வாயை திறந்து தூங்குவது எப்படி பற்களை பாதிக்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காரணம் #1
இயற்கையாகவே எச்சில், வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.

காரணம் #2
தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தையாகஆரம்பமாகும்.

எச்சில்
பொதுவாக வாயில் எச்சில் குறைவாக சுரக்கும் போது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவுகள் அதிகரித்து, பற்கள் வேகமாக சொத்தையாகும்.

சிந்தியுங்கள்
இந்நிலையில் தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளும் போது, நாம் நம் பற்களுக்கு எவ்வளவு தீங்கை விளைவிக்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

யாருக்கு சொத்தை பற்கள் அதிகம் இருக்கும்?
ஆஸ்துமா அல்லது தூக்க பிரச்சனை இருப்பவர்களுக்கு, பற்களில் சொத்தை இருக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். குறிப்பாக வாயின் பின்புற பக்கத்தில் தான் சொத்தைப் பற்கள் இருக்குமாம்.

எப்படி தூங்குவது சிறந்தது?
எனவே நேராக படுப்பதைத் தவிர்த்து, இடது பக்கமாக தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாயை திறந்தவாறு தூங்குவதைத் தவிர்ப்பதுடன், பற்கள் பாதிப்படைவதையும் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
