நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் எலும்புகளின் ஆரோக்கியத்தை அழிக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

டயட் மற்றும் உடற்பயிற்சி தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மிகவும் முக்கியமானவைகள். எனவே ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும் உணவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் எலும்புகள் பலவீனமாகி அழிய ஆரம்பிக்கும்.

Common Diet Mistakes That Are Killing Your Bones

தற்போது நிறைய பேர் எலும்பு பிரச்சனையால் தான் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணமும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் தான். இங்கு நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அழிக்கும் சில மோசமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து, இனிமேல் அவற்றைத் தவிர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு

உப்பு

அளவுக்கு அதிகமான உப்பு உடலில் இருந்து அதிகப்படியான கால்சியத்தை சிறுநீரின் வழியே வெளியேற்றும். இப்படி கால்சியம் உடலில் இருந்து வெளியேறினால், எலும்புகள் பலவீனமாகி, அதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 10 கிராம் வரை உப்பை சேர்த்து வாருங்கள்.

சோடா பானங்கள்

சோடா பானங்கள்

சோடா பானங்களில் உள்ள பாஸ்பரஸ் கால்சியம் இழப்பை ஏற்படுத்துவதோடு, மக்னீசியத்தின் அளவையும் குறைத்து, எலும்புகளின் அழிவிற்கு வழிவகுக்கும். எனவே சோடா பானங்கள் பருகும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

காபி

காபி

ஒரு நாளைக்கு 3-4 கப் காபி குடித்து வந்தால், உடனே அதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் உள்ள காப்ஃபைன், கால்சியத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை இழக்கச் செய்யும். வேண்டுமானால் காபிக்கு பதிலாக டீ குடியுங்கள். அதுவும் அளவாக பருகுங்கள்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட்டில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் கால்சியம் இருந்தாலும், அதில் ஆக்ஸலேட்டுகளும் உள்ளதால், இது கால்சியம் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்து, எலும்புகளைப் பலவீனமாக்கிவிடும். எனவே சாக்லேட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

மது

மது

அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, மது அருந்தாதவர்களை விட எலும்புகள் மிகவும் பலவீனமாக இருக்கும். அதுமட்டுமின்றி, மது கல்லீரலையும் பாதிக்கும்.

இறைச்சி மற்றும் சர்க்கரை உணவுகள்

இறைச்சி மற்றும் சர்க்கரை உணவுகள்

அளவுக்கு அதிகமான இறைச்சி மற்றும் சர்க்கரை உணவுகளை நீங்கள் உட்கொண்டு வருபவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் அவை எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பவை. வேண்டுமானால் மீன், நவதானியங்கள், நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Diet Mistakes That Are Killing Your Bones

Here are some common diet mistakes that are KILLING your bones. Read on to know more...
Story first published: Friday, October 14, 2016, 13:32 [IST]
Subscribe Newsletter