உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளிப்படுகிறதா? இதோ அதற்கான சில நாட்டு வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் அதிகம் வருத்தப்படும் மூன்று விஷயங்கள் உடல் பருமன், தலைமுடி பிரச்சனை மற்றும் உடலுறவு சார்ந்த பிரச்சனைகள். அதில் உடல் பருமன், தலைமுடி பிரச்சனைகளை வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறி தீர்வு காணலாம். ஆனால் உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை மருத்துவரிடம் சொல்லக் கூட தயங்குவார்கள்.

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்!

அதில் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பாலியல் பிரச்சனை விந்துதள்ளல். அதாவது உடலுறவில் ஈடுபடும் போது முன்கூட்டியே விந்து வெளிப்படுதலாகும். இதனால் துணையை திருப்திப்படுத்த முடியாமல் நிறைய ஆண்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இதை நிச்சயம் ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் சரிசெய்யலாம்.

பாலியல் பிரச்சனைகளைத் தடுத்து, செக்ஸ் வாழ்க்கையில் முழு இன்பத்தைக் காண உதவும் உணவுகள்!

இப்போது இதற்கான காரணங்கள் மற்றும் சில இயற்கை நாட்டு வைத்திய முறைகளைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்துதள்ளலுக்கான முக்கிய காரணங்கள்

விந்துதள்ளலுக்கான முக்கிய காரணங்கள்

காரணங்கள்

* முதுமை

* கவலை அல்லது பயம்

* ஊட்டச்சத்துக் குறைபாடுகள்

* ஹார்மோன் ஏற்றதாழ்வுகள்

* அதிகமாக புகைப்பிடித்தல்

* அதிகமாக மது அருந்துதல்

* உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருத்தல்

* நீழிரிவு, தைராய்டு போன்ற உடல்நல பிரச்சனைகள்

வைத்தியம் #1

வைத்தியம் #1

இஞ்சி, முட்டை, தேன்

இஞ்சி உடலின் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்பு பிரச்சனை மற்றும் விந்துதள்ளல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு பாதியாக வேக வைத்த முட்டையுடன், இஞ்சி சாறு மற்றும் தேன் சேர்த்து, தினமும் இரவில் உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

இஞ்சி, தேன் மற்றும் பால்

பாலில் தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து பருகினால் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் இஞ்சி சாற்றினை 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் பருக வேண்டும்.

வைத்தியம் #3

வைத்தியம் #3

பூண்டு

ஆண்கள் தினமும் 2-3 பற்கள் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும். இல்லாவிட்டால், அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வந்தாலும், இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

வைத்தியம் #4

வைத்தியம் #4

கேரட், முட்டை மற்றும் தேன்

150 கிராம் கேரட்டை துருவி, பாதியாக வேக வைத்த முட்டையின் மேல் தூவி, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, 1-2 மாதம் தினமும் உட்கொண்டு வந்தால், பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

வைத்தியம் #5

வைத்தியம் #5

வெண்டைக்காய்

வெண்டைக்காய் கூட பாலியல் பிரச்சனைகளைத் தடுத்து, நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவும். அதற்கு 5-10 கிராம் வெண்டைக்காய் வேர் பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு மற்றும் 1 டம்ளர் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தினமும் பருக வேண்டும்.

வைத்தியம் #6

வைத்தியம் #6

வெள்ளை வெங்காயம்

முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணியாக வெள்ளை வெங்காயம் கருதப்படுகிறது. ஏனெனில் வெள்ளை வெங்காயம் இனப்பெருக்க உறுப்பை வலிமையாக்கி, விந்து முன்கூட்டியே வெளிப்படுவதைத் தடுக்க உதவும்.

வைத்தியம் #7

வைத்தியம் #7

அஸ்பாரகஸ் வேர் மற்றும் மாட்டுப் பால்

15-20 கிராம் அஸ்பாரகஸ் வேரை ஒரு டம்ளர் மாட்டுப் பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தினமும் இருவேளைப் பருகி வர, ஓர் நல்ல பலன் கிடைக்கும்.

வைத்தியம் #8

வைத்தியம் #8

ஜின்செங் மற்றும் ஆட்டுப் பால்

இது மற்றொரு அற்புதமான நிவாரணி. இந்த முறையில் 1 டம்ளர் வெதுவெதுப்பான ஆட்டுப் பாலில் 1/2 டீஸ்பூன் ஜின்செங் என்றும் மூலிகை பொடியை சேர்த்து கலந்து பருகி வர, விந்து முன்கூட்டியே வெளிப்படுவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Natural Tips To Cure Premature Ejaculation

Here are some best and natural tips to cure premature ejaculation. Read on to know more...
Subscribe Newsletter