Latest Updates
-
தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த மாதிரி கிச்சடி செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்... ட்ரை பண்ணுங்க! -
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? 1 கப் தயிர் இருந்தா.. 10 நிமிடத்தில் இத செய்யுங்க... -
இந்தியாவில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருக்கும் டாப் 10 மாநிலங்கள்... சில லட்சம் பேர்தான் இங்க வாழறாங்களாம். -
Ram Navami 2026: ராம நவமி நாளில் ராமரின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும்.. - டக்குன்னு எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம்...! -
செவ்வாய்-புதன் மீன ராசியில் இணைவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? சென்னை முதலிடத்தில் இல்லையாம்...!
Tamil Nadu Elections 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் திருவிழா சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்து விடும்.
தமிழ்நாட்டில் தற்போது 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வாக்காளர் எண்ணிக்கை முதல் தொகுதியின் பொருளாதார நிலை வரை ஒவ்வொரு தொகுதியும் வித்தியாசமானதாக உள்ளது. தமிழ்நாடு இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டமாக எந்த மாவட்டம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக சென்னைதான் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டமும், தொகுதியும் சென்னையில் இல்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டம் எது?
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, சென்னையை பின்னுக்குத் தள்ளி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் மிகவும் செழிப்பான மாவட்டமாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தனிநபர் வருமானம் சுமார் ₹7 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது, இது பொருளாதார நலன் சார்ந்த செயல்பாடுகளில் இந்த மாவட்டத்தை முன்னணி மாவட்டங்களின் வரிசையில் நிறுத்துகிறது. தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் என மொத்தம் ஏழு தொகுதிகள் இந்த மாவட்டத்தில் உள்ளது.
2026-ஆம் ஆண்டின் தொடக்க நிலவரப்படி, தனிநபர் வருமானம் சுமார் ₹7.47 முதல் ₹8.54 லட்சம் வரை இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டமாக உருவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், சென்னை, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தின் சிறப்பு
தமிழ்நாட்டின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, செங்கல்பட்டு மாவட்டம் 2019-ல் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் வடக்கே சென்னை, மேற்கே காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை, தெற்கே விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் இருப்பிடமாகத் திகழ்வதுடன், வாகனத் துறை மற்றும் அதன் துணைத் தொழில்களுக்கான உற்பத்தி மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டமானது?
செங்கல்பட்டு, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரு கடலோர மாவட்டமாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு மாவட்டமாக இருப்பதால், இங்கு மேலும் நகர்ப்புற மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான கணிசமான வாய்ப்புகள் நிறைந்துள்ளன. சென்னை, கோவை போன்ற மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளி செங்கல்பட்டு தமிழ்நாட்டின் செழிப்பான மாவட்டமாக மாற பல்வேறு காரணங்கள் உள்ளது. சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் தொழில்துறை வளர்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியின் இயல்பான விளைவாகவே அடிப்படை வசதிகளின் மேம்பாடும் முக்கிய காரணமாக உள்ளது. இது சந்தையின் மதிப்பைப் பன்மடங்கு உயர்த்துகிறது.
வரப்போகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications












