Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்?
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தலானது ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது மற்றும் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல கட்சி தலைவர்களும் வாக்குகளை சேகரிக்க தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள்.
ஆனால் இந்தியாவில் மக்களிடையே ஒரு வழக்கம் உள்ளது. அது ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன், அந்த காரியம் நினைத்தவாறு வெற்றிகரமாக நடக்க கடவுளின் ஆசியைப் பெற நினைப்பார்கள்.

அதுவும் தமிழ்நாட்டில் அரசியலும், கலாச்சாரமும் பெரும்பாலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதன் ஒரு உதாரணம் தான், அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கியப் பிரச்சாரங்களைத் தொடங்குவதற்கு முன்பு கோயில்களுக்குச் செல்லும் பாரம்பரியம். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல கட்சித் தலைவர்கள் வருகை தந்து, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.
2000 ஆண்டுகள் பழமையான ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் கட்டிடக்கலைப் பெருமைக்காக அறியப்படும் இத்திருக்கோயில், அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்பு ஆசி பெற விரும்பும் பல தலைவர்களுக்கு ஒரு வழக்கமான தொடக்கப் புள்ளியாக மாறியுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலின் ஆன்மீக முக்கியத்துவம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பார்வதி தேவி மீனாட்சி அம்மனாகவும், சிவபெருமான் சுந்தரேஸ்வரராகவும் காட்சி தருகிறார்கள். தென்னிந்தியாவில் உள்ள மிகவும் போற்றப்படும் கோயில்களுள் இந்த கோயிலும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலுக்கு சுமார் மில்லியன் கணக்கானோர் வருகை தருகிறார்கள். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் தெய்வீக வழிகாட்டுதல், வலிமை மற்றும் வெற்றியை பெற இக்கோயிலுக்கு அடிக்கடி வருவதைக் காணலாம்.
அதுவும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த அழுத்தம் நிறைந்த சூழலில், ஆன்மீகம் மன அமைதியையும், நம்பிக்கையையும், உறுதியையும் அளிக்கும். முக்கியமாக சக்தி வாய்ந்த இந்த கோயிலுக்கு நம்பிக்கையுடன் மனதார பிராத்தனை செய்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினால், அது நேர்மறையைக் கொண்டு வரும் என்றும், வழியில் வரும் தடைகள் தகர்க்கப்படும் என்றும் பல தலைவர்கள் நம்புகிறார்கள்.
தமிழர் பண்பாட்டில் வேரூன்றிய பாரம்பரியம்
பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தையும், முயற்சியையும் மேற்கொள்ளும் முன் கடவுளின் ஆசியைப் பெறும் பாரம்பரிய வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அது ஒரு புதிய வேலையாகட்டும், திருமணமானமாகட்டும் அல்லது ஒரு அரசியல் பிரச்சாரமாகட்டும், முதலில் கோவிலுக்கு சென்று பின் தொடங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படியான வழக்கம் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடத்திலும் இயற்கையாகவே உள்ளது.
வாக்காளர்களுடன் உணர்வுபூர்வமாக இணைவதற்கான சிறந்த வழி
கோயில் தரிசனங்களானது ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. அவை பொதுமக்களின் கவனத்தையும் ஒருவிதத்தில் ஈர்க்கும். அதுவும் அரசியல் தலைவர்கள் ஒரு புனிதமான கோவிலில் பிரார்த்தனை செய்வதைக் காணும் போது, அது வாக்காளர்களிடையே தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு உணர்வை உருவாக்குகிறது. இந்த காரணத்தினாலும் தமிழ்நாட்டில் பல தலைவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு மக்களுடன் உணர்வுபூர்வமாக இணைகின்றனர்.
அரசியல்வாதிகளின் சிறு செயல்களிலும் அரசியல் இல்லாமல் இருக்காது. அப்படி தான் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்குவதற்கு முன்பு மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழக்கமானது, ஒருவித நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்பைப் பிரதிபலிக்கிறது.



Click it and Unblock the Notifications
