Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Steamed Amla Health Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான உணவுகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு அருமையான உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய்ஆயுர்வேத மருத்துவத்தில் சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.
நெல்லிக்காய் அளவில் சிறியதாக இருந்தாலும், அது வழங்கும் நன்மைகளோ ஏராளம். குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த சத்தை தவிர, இதில் வேறு பல வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன.

ஆனால் இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடுவதை விட, ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைத்து, இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். அதுவும் தினமும் ஒரு வேக வைத்த நெல்லிக்காயை சாப்பிடும் போது, உடலினுள் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். இப்போது தினமும் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமானம் மேம்படும்
நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து சாப்பிடும் போது, உடலின் மெட்டபாலிசம் மேம்படும். மேலும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்பட்டு வருபவர்கள், இதை சாப்பிடும் போது, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணமும் கிடைக்கும்.
2. நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்
ஆவியில் வேக வைத்த நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்ப்பதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி, இருமல் போன்ற தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை அதிகரிக்கிறது.
3. சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் அமைப்பு மேம்படுவதோடு, சருமமும் பளபளப்பாக இருக்கும். கூடுதலாக நெல்லிக்காய் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கிறது மற்றும் முடியின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிப்பதோடு, முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
4. இதய நோய் தடுக்கப்படும்
ஆவியில் நெல்லிக்காயை வேக வைத்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் குறைகிறது. அதுவும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.
5. கண்களுக்கு நல்லது
கண் பார்வையை மேம்படுத்த வேண்டுமானால் தினமும் ஆவியில் வேக வைத்த ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் கண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. தொடர்ந்து வேக வைத்த நெல்லிக்காயை உட்கொள்ளும் போது, அது வயது தொடர்பான கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
எப்படி சாப்பிடுவது?
* முதலில் நெல்லிக்காயை எடுத்து நீரில் கழுவி, ஒரு இட்லி பாத்திரத்தினுள் வைத்து, அடுப்பில் வைத்து 7-10 நிமிடங்கள் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பின் அந்த வேக வைத்த நெல்லிக்காயை பகல் வேளையில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


