Latest Updates
-
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்?
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக நடத்துவார்கள். அதுவும் இந்த தேர்தல் பிரச்சாரங்கள் பெரும்பாலும் கோடையின் உச்சக்கட்ட மாதங்களில் நடைபெறுவதால், அரசியல் தலைவர்களும், அவர்களது குழுவினரும் நீரேற்றத்துடனும் ஆற்றலுடனும் இருப்பது மிகவும் அவசியமாகிறது.
கொளுத்தும் கோடையில் உடலை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள ஏராளமான பானங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் நீர் மோர் என்று அழைக்கப்படும் மோர் தான் பெரும்பாலானோரின் விருப்பமான பானமாக உள்ளது. எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய இந்த எளிய பானம், தீவிரமான பிரச்சார நாட்களில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

சிறந்த கோடைக்கால பானம்
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பிரச்சாரம் செய்வது என்பது, சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் நிற்பதாகும். அப்போது வெப்பநிலை பெரும்பாலும் 35°C-க்கு மேல் உயரும். இவ்வளவு கடுமையான வெயிலில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு இயற்கை குளிர்விப்பானாக மோர் செயல்பட்டு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும், வெப்ப வாதத்தை தடுக்கவும் உதவுகிறது. அதோடு ஒரு டம்ளர் மோர் உடலை நீண்ட நேரம் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகிறது. ஆகவே தான் தேர்தல் பிரச்சார காலங்களில் ஆங்காங்கு நீர் மோர் பந்தல் வைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த பானம்
மோர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டுமல்லாமல், இதில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோபயோடிக்குகள் நிறைந்துள்ளதால், செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தேர்தல் பிரச்சார காலங்களில் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள் இருப்பதால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் மோரை குடிப்பதன் மூலம், அது செரிமான மண்டலத்தை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
எளிமை மற்றும் கலாச்சார தொடர்பு
தமிழ்நாட்டில் மோர் என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது அன்றாட வாழ்வின் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இப்படிப்பட்ட மோரை அரசியல்வாதிகள் கார்பனேட்டட் பானங்களுக்கு பதிலாக பிரச்சார காலங்களில் தேர்ந்தெடுத்து அருந்தும் போது, அது அவர்களின் எளிமையை காட்டுவதோடு, மக்களிடையே ஒருவித வலுவான தொடர்பை ஏற்படுத்தும்.
அதுவும் தேர்தல் பிரச்சார நிறுத்தங்களின் போது உள்ளூர் மக்களுடன் ஒரு டம்ளர் நீர்மோரைப் பகிர்ந்து கொள்வது, தலைவர்கள் வாக்காளர்களுடன் கலாச்சார மட்டத்தில் இணைய உதவி புரிந்து, மக்கள் மனதில் ஒருவித நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எளிதில் கிடைக்கக்கூடியது
மோரின் மிகவும் முக்கியமான நன்மைகளுள் ஒன்று, இது எளிதில் கிடைக்கக்கூடியது. இது கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்கள் முழுவதும் பரவலாகக் கிடைக்கிறது. முக்கியமாக இது ஒரு செலவு குறைவான பானம். இந்த பானத்தை தயிர், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, தண்ணீர் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே அதிக அளவில் தயாரிக்கலாம்.
மொத்தத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது வெயிலால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க மோர் உதவுவது மட்டுமல்லாமல், மக்களுடனான தொடர்பையும் வலுப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

