காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கேரட் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதற்கு அதில் உள்ள பீட்டா கரோட்டீன் தான். இந்த பீட்டா கரோட்டீன் மற்ற காய்கறிகளை விட, கேரட்டில் தான் அதிகளவில் உள்ளது. இந்த பீட்டா கரோட்டீனில் இருந்து கிடைப்பது தான் வைட்டமின் ஏ. இது சருமம், நகம் மற்றும் தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

மேலும் வைட்டமின் ஏ கல்லீரல், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி, இந்த வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் இதயத்தை வலிமைப்படுத்தவும், கண் பார்வையை மேம்படுத்தவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் சுத்தமாகும்

உடல் சுத்தமாகும்

கேரட் ஜூஸ் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும். மேலும் கேரட் ஜூஸ் ஆர்த்ரிடிஸ், மோசமான செரிமானம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும்.

மனச்சோர்வு நீங்கும்

மனச்சோர்வு நீங்கும்

கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம், அளவுக்கு அதிகமான வேலைச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆரோக்கியமான இதயம் மற்றும் உடல் எடை

ஆரோக்கியமான இதயம் மற்றும் உடல் எடை

கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சோர்ந்துள்ள இதய தசைகள் ரிலாக்ஸாகும் மற்றும் உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும்.

குடிக்கும் முறை

குடிக்கும் முறை

கேரட் ஜூஸை மருந்தாக எடுக்க நினைத்தால், நீர் சேர்க்காமல் அரைத்து வடிகட்டி, காலை உணவிற்கு முன் 30 மிலி குடியுங்கள். கேரட் ஜூஸ் பாக்டீரியாக்களை அழிக்க வல்லது என்பதால், அதை வாயில் ஊற்றி விழுங்கும் முன் சில நொடிகள் வாயில் வைத்து பின் விழுங்குங்கள்.

வயிற்று அமிலத்தில் விடுபட...

வயிற்று அமிலத்தில் விடுபட...

வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தில் இருந்து விடுபட ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளைப் படித்து தெரிந்த பின், காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக, நற்பதமான கேரட் ஜூஸைக் குடிக்கலாம் என்று தோன்றினால், உடனே செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Glass of Carrot Juice Before Your Breakfast Can Treat The Following Diseases

Do you know a glass of carrot juice before your breakfast can treat the following diseases? Read on to know more...
Story first published: Friday, November 4, 2016, 9:00 [IST]