For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீர்-னு அலர்ஜி ஏற்பட்டுருக்கா? அப்ப இந்த பொருள் கூட காரணமா இருக்கலாம்... படிச்சு உஷாராகிக்கோங்க...

|

உயிர் வாழ தேவையானது என்றால் காற்று, நீருக்கு அடுத்த படியாக உணவு என்று கூறலாம். உணவு ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என நீண்ட பட்டியலே இருக்கும். ஆனால், ஒவ்வாமை அதாவது அலர்ஜி என்ற ஒன்று இருப்பதை பெரும்பாலானர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சில உணவுகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும் போது, அலர்ஜியானது ஏற்படுகிறது. அப்படி அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சில முக்கிய உணவுகளை பற்றி தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்...

MOST READ: தைராய்டு பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

ஒரு முட்டையின் வெள்ளை கரு, ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் புரதங்களைக் கொண்டிருக்கிறது. ஆனாலும், ஒவ்வாமைக்கு ஆளானவர்கள் முட்டையை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை பிரிப்பது என்பது மிகவும் கடினம்.

பொதுவான ஆதாரங்கள்: ரொட்டி, மஃபின்கள், பாஸ்தா, மக்ரோனி, மயோனைஸ் போன்ற உணவுகள்.

எதிர்பாராத ஆதாரங்கள்: நுரை மிதக்கும் பானங்கள், முட்டை தடவி வேக வைத்த பொருட்கள்.

பால்

பால்

குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு மிகவும் பொதுவான உணவு ஒவ்வாமைகளில் பாலும் ஒன்றாகும். பசுவின் பாலில் ஒவ்வாமை உள்ளவர்கள், நிச்சயமாக பிற வீட்டு விலங்குகளின் பாலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொதுவான ஆதாரங்கள்: வெண்ணெய், சீஸ், பால் சார்ந்த இனிப்பு வகைகள்.

எதிர்பாராத ஆதாரங்கள்: கேரமல், சாக்லேட், ஸ்டீக்ஸ், ஹாட் டாக்ஸ், சருமம் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள்.

கேசீன், வே புரோடீன், வெண்ணெய், தயிர், கிரீம் அல்லது நெய் போன்ற பாலுக்கான குறியீட்டு சொற்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பொருட்களின் லேபிளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ட்ரீ நட்ஸ்

ட்ரீ நட்ஸ்

இதில் முந்திரி, பிஸ்தா, ஹாசில் நட்ஸ், அக்ரூட் பருப்புகள், பிரேசில் நட்ஸ் மற்றும் பாதாம் ஆகியவை அடங்கும். ஒரு வகையான நட்ஸால் அலர்ஜி உள்ள ஒருவர், மற்ற வகை நட்ஸ்களுக்கும் ஒவ்வாமை கொண்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவான ஆதாரங்கள்: நட்ஸ் வெண்ணெய், பெஸ்டோ, நட்ஸ் மாவு.

எதிர்பாராத ஆதாரங்கள்: சீரியல்ஸ், எனர்ஜி பார்கள், சுவையேற்றப்பட்ட காபி.

வேர்க்கடலை

வேர்க்கடலை

அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளிலிருந்து வேர்க்கடலை சற்று வேறுபட்டது. நட்ஸிற்கு பதிலாக, நிலத்தடியில் வளரக்கூடிய பீன்ஸ், பட்டாணி, பயறு, சோயாபீன்ஸ் போன்றவற்றின் குடும்பத்தை சார்ந்தது தான் வேர்க்கடலை. வேர்க்கடலை மற்றும் நட்ஸ், உற்பத்தி மற்றும் சேவை செயல்முறைகளின் போது பெரும்பாலும் ஒன்றிற்கொன்று தொடர்பு கொள்கின்றன.

பொதுவான ஆதாரங்கள்: வேக வைத்த பொருட்கள், சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், மிக்ஸட் நட்ஸ்.

எதிர்பாராத ஆதாரங்கள்: பேன் கேக், மாற்று இறைச்சி, கேக், குக்கீஸ்.

மீன்

மீன்

ஒரு குறிப்பிட்ட வகை மீன்களுக்கு மட்டும் ஒவ்வாமை உள்ள 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், மற்ற வகை மீன்களுக்கும் ஒவ்வாமை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய ஒவ்வாமை உள்ளவர்கள், கடல் உணவு உணவகங்கள் மற்றும் மீன் சந்தைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த இடங்களில் குறுக்கு தொடர்பு மூலம் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாயப்புள்ளது.

பொதுவான ஆதாரங்கள்: அனைத்து வகையான மீன்கள்.

எதிர்பாராத ஆதாரங்கள்: பார்பிக்யூ சாஸ், சீசர் டிரஸ்ஸிங், வொர்செஸ்டர்ஷைர் சாஸ்.

மட்டி

மட்டி

இவை இரண்டு வகைகளை சார்ந்தது: ஓட்டுமீன்கள் ( அதாவது, இறால், நண்டு போன்றவை) மற்றும் மொல்லஸ்க்குகள் (அதாவது, கிளாம்ஸ், மஸ்ஸல்ஸ், சிப்பிகள், ஸ்காலப்ஸ் போன்றவை). பெரும்பாலான கடுமையான மட்டிகளின் எதிர்வினைகளுக்கு, க்ரஸ்டேசியா தான் காரணம். அவை பொதுவாகவே மிகவும் கடுமையான ஒன்று.

பொதுவான ஆதாரங்கள்: அனைத்து வகையான மட்டி.

எதிர்பாராத ஆதாரங்கள்: மீன் சாஸை சுவை தளமாக பயன்படுத்தும் ஆசிய உணவுகள்.

சோயா

சோயா

சோயா பீன்ஸ் பருப்பு வகையை சார்ந்தது. இதில் கிட்னி பீன்ஸ், பட்டாணி, பயறு, வேர்க்கடலை போன்ற உணவுகளும் அடங்கும். முழு, முதிர்ச்சியடையாத சோயா பீன்ஸ் எடமாம் என்றும் அழைக்கப்படுகிறது. முதன்மையாக டோஃபுவுடன் தொடர்புடையது என்றாலும், சோயா பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகிறது.

பொதுவான ஆதாரங்கள்: சோயா சாஸ், டெம்பே, டோஃபு.

எதிர்பாராத ஆதாரங்கள்: டின்களில் அடைக்கப்பட்ட டுனா, மிசோ, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்கட்டுகள், டின்களில் அடைக்கப்பட்ட சூப்புகள்.

கோதுமை

கோதுமை

அலர்ஜி ஏற்படுத்தும் டாப் 8 உணவுகளின் இறுதி இடத்தை பிடிப்பது கோதுமை. இது பசையம் சகிப்புத்தன்மையின் மூலமாகவும் உள்ளது. உங்களுக்கு கோதுமை ஒவ்வாமை இருந்தால், பார்லி, திணை, கம்பு போன்ற மாற்று தானியங்களைப் பயன்படுத்துங்கள். கோதுமைக்கு இந்த சிறு தானியங்கள் சிறந்த மாற்று உணவுகளாகும்.

பொதுவான ஆதாரங்கள்: ரொட்டி, சீரியல்ஸ், பிஸ்கட்டுகள், மாவு.

எதிர்பாராத ஆதாரங்கள்: ஐஸ்கிரீம், மரினாரா சாஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பீர்.

எள்

எள்

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவுகளில் எள் 9 வது இடத்தில் உள்ளது. மேலும், எள் விதைகள் கொண்ட பர்கர் பன் மற்றும் ரொட்டி போன்றவற்றால் கூட அலர்ஜியானது தூண்டப்படலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 8 Allergens In Tamil

Here we listed top 8 allergens in tamil. Read on...