For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்!

அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் ஓர் துன்பரகமான நிலை. இந்த பிரச்சனை உள்ளவர்கள், இரவு நேரத்தில் பல முறை கழிவறைக்கு செல்லக்கூடும்.

|

அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் ஓர் துன்பரகமான நிலை. இந்த பிரச்சனை உள்ளவர்கள், இரவு நேரத்தில் பல முறை கழிவறைக்கு செல்லக்கூடும். அதோடு இப்பிரச்சனை உள்ளவர்களால் சிறுநீரை அடக்குவதென்பது இயலாத ஒன்றாக இருக்கும். இதுப்போன்ற பிரச்சனை ஒருவருக்கு பல காரணங்களால் ஏற்படலாம்.

Foods That Make Overactive Bladder Worse

அதில் ஒன்று அளவுக்கு அதிகமாக நீரைக் குடிப்பது. நாம் எவ்வளவு நீர் குடிக்கிறோமோ, அவ்வளவு சிறுநீரைக் கழிப்போம். அதற்கு அடுத்தபடியாக புகைப்பழக்கம் சிறுநீர்ப்பை தசைகளை எரிச்சலடையச் செய்யலாம். இதனால் இருமும் போது கூட அது சிறுநீர் கசிவை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் கோளாறுகள் நீரிழிவு மற்றும் முதுமையைப் போலவே இந்த நிலையை ஏற்படுத்தக்கூடும். அதேப் போல் சில உணவுகளும் இந்த நிலையை மோசமாக்கும்.

MOST READ: நற்செய்தி! இந்த 3 உணவுப் பொருட்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாம் - ஆய்வில் தகவல்

கீழே அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தவிர்த்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்கலாம். இல்லாவிட்டால், இந்த உணவுகள் நிலைமையை படுமோசமாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஃபுரூட் போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை பாதிக்கும். ஆகவே உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருப்பின், இந்த வகை பழங்களைத் தவிர்த்திடுங்கள்.

தக்காளி

தக்காளி

தக்காளி ஒரு அசிட்டிக் உணவு. இது சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டி, OAB அறிகுறிகளை மோசமாக்கும். குறிப்பாக சென்சிடிவ்வானவர்கள் தக்காளியை மட்டுமின்றி, தக்காளி தயாரிப்புக்களான தக்காளி சாஸ், பிட்சா சாஸ், கெட்சப் மற்றும் சல்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டக்கூடியவை. இது சிறுநீர்ப்பை நிரம்பியுள்ளது என்பதை மூளைக்கு தெரிவிக்கும் சிக்னல்களை சீர்குலைக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை ஆல்கஹாலையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

காற்றூட்டப்பட்ட பானங்கள்

காற்றூட்டப்பட்ட பானங்கள்

காற்றூட்டப்பட்ட கார்போனேட்டட் பானங்கள் சிறுநீர்ப்பை பிரச்சனைகளை மோசமாக்கும். ஆகவே இந்த வகை பானங்களை அறவே தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி, எந்நேரமும் கழிவறையிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

காபி, டீ

காபி, டீ

காபி மற்றும் டீயில் உள்ள காப்ஃபைன், சிறுநீர்ப்பை செயல்பாட்டை அதிகரித்து, OAB-யின் அறிகுறிகளை தீவிரமாக வழிவகுக்கும். ஆகவே காப்ஃபைன் நிறைந்த பானங்களான காபி, டீ போன்றவற்றைக் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

சாக்லேட்

சாக்லேட்

காபி மற்றும் டீ போன்றே சாக்லேட்டிலும் சிறிது காப்ஃபைன் உள்ளது. எனவே வழக்கமான சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, காப்ஃபைன் இல்லாத வெள்ளை சாக்லேட்டை சாப்பிடுங்கள்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

கண்களில் இருந்து நீரை வரவழைத்து, உதடுகளில் எரிச்சலூட்டும் காரமான உணவுகள், சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யலாம். குறிப்பாக மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் போன்றவற்றில் கவனமாக இருங்கள். முக்கியமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல்நிலை என்பதால், காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் முன், எது உங்களை பாதிக்கிறது, எது உங்களை பாதிக்கவில்லை என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சுவைக்காகவும், பாதுகாப்புக்காகவும் சேர்க்கும் செயற்கை சுவையூட்டிகள் அதிகம் இருக்கின்றன. இவை சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யும் மற்றும் OAB அறிகுறிகளை மோசமாக்கும். ஆகவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான, சீரான உணவை உண்ணுங்கள்.

வெங்காயம்

வெங்காயம்

காரமான மற்றும் அசிட்டிக் உணவுகளைப் போன்று வெங்காயமும், சிறுநீர்ப்பை பிரச்சனைகளை உண்டாக்கும் மற்றும் அடிக்கடி சிறுநீரைக் கழிக்கத் தூண்டும். முக்கியமாக வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் தான் நிலைமை மோசமாகும். எனவே OAB பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி ஜூஸ் சிறுநீரக பாதை தொற்று அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கிரான்பெர்ரி பழங்கள் அசிட்டிக் தன்மை கொண்டவை. தக்காளி, சிட்ரஸ் பழங்களைப் போலவே, கிரான்பெர்ரி பழங்களும் சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். ஆகவே இந்த பழ ஜூஸ் குடிக்க ஆசைப்படாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Make Overactive Bladder Worse

An over active bladder can be embarrassing and distressing. To avoid this condition you need to avoid certain foods.
Story first published: Thursday, December 3, 2020, 14:13 [IST]
Desktop Bottom Promotion