For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பது தெரியுமா?

முதலில் ஒருவர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், பானங்களைக் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள் எவையென்பதை அறிந்து, அவற்றை முதலில் தவிர்க்க ஆரம்பிக்க வேண்டும்.

|

உலகெங்கிலும் உயிரைப் பறிக்கும் கொடிய கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல கசாயங்கள், தேநீர் வகைகளை தினமும் நாம் குடித்து வருகிறோம். ஆனால், நம்மை அறியாமலேயே நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் ஒருசில உணவுகளையும் நாம் அன்றாடம் சாப்பிட்டு வருகிறோம் என்பது தெரியுமா?

Common Foods That Can Weaken Your Immunity

ஆம், நாம் தினமும் சாப்பிடும் சில உணவுகள் நமது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து வருகிறது. இதனால் நாம் என்ன கசாயம் குடித்தாலும், அதனால் எவ்வித பலனும் கிடைக்காது. ஆகவே முதலில் ஒருவர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், பானங்களைக் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள் எவையென்பதை அறிந்து, அவற்றை முதலில் தவிர்க்க ஆரம்பிக்க வேண்டும். கீழே ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் சில பொதுவான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து தவிர்க்க முயலுங்கள்.

MOST READ: கொரோனா இருக்கா? உடம்பில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை

சர்க்கரை

நாம் அன்றாட பானங்களில் சுவைக்காக சேர்க்கும் ஓர் முக்கியப் பொருள் தான் சர்க்கரை. இந்த சர்க்கரையில் நன்மையை விட தீமை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்த்தால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, அழற்சியை உண்டாக்கும் புரோட்டீன்களின் உற்பத்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மோசமாக பாதிக்கும். அதோடு உயர் இரத்த சர்க்கரை குடல் பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, குடல் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவித்து, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை குறைத்துவிடும். எனவே சர்க்கரை அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்து, அளவாக சேர்க்க முயலுங்கள்.

உப்பு

உப்பு

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், பேக்கரி உணவுகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் அதிக உப்புக்களைக் கொண்டவை. அதிகளவிலான உப்பு உடலில் அழற்சியைத் தூண்டிவிடும் மற்றும் ஆட்டோ-இம்யூன் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக உப்பு நோயெதிர்ப்பு மண்டலத்தின் வழக்கமான செயல்பாட்டை தடுப்பதோடு, அழற்சி எதிர்ப்பிற்கான பதிலை அடக்குகிறது மற்றும் குடல் பாக்டீரியாக்களை மாற்றுகிறது. ஆகவே அன்றாட உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ள முயலுங்கள்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

வறுத்த அல்லது பொரித்த உணவுகளில் AGEs என்னும் மூலக்கூறுகள் அதிகம். இந்த மூலக்கூறுகளானது அதிக வெப்பநிலையில் உணவை சமைக்கும் போது, அதில் உள்ள சர்க்கரை புரோட்டீன் அல்லது கொழுப்புக்களுடன் வினைபுரியும் போது உருவாகின்றன. அதிகளவிலான AGE-க்கள் அதிக அழற்சி மற்றும் செல்லுலார் சேதத்திற்கு பங்களிக்கும். இதனால் உடல் வீக்கம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் செயல்பாடு குறைதல், செல்லுலார் செயலிழப்பு மற்றும் குடல் பாக்டீகரியாக்களை எதிர்மறையாக பாதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். ஆகவே பிரெஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுத்த சிக்கன், பொரித்த மீன் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

அதிகமான காப்ஃபைன்

அதிகமான காப்ஃபைன்

டீ மற்றும் காபியில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதனால் இவை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பானங்களாக கருதப்படுகின்றன. ஆனால் அதிக அளவிலான காப்ஃபைனை எடுப்பது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்க, ஊட்டச்சத்துக்கள் இல்லாத காப்ஃபைன் பானங்கள், சர்க்கரை பானங்கள், சோடா அல்லது எனர்ஜி பானங்கள் போன்ற செயற்கை சுவையூட்டிகளைக் கொண்ட பானங்களைத் தவிர்த்திடுங்கள். அதோடு இரவு நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால், தூங்குவதற்கு 6 மணிநேரத்திற்கு முன்பிருந்தே காபி, டீ எதுவும் குடிக்காதீர்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஓர் பானம். இதை அளவாக பருகினால் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கணிசமாக பாதிக்கப்பட்டு, நிமோனியா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Foods That Can Weaken Your Immunity

Here we listed some common foods that can weaken your immunity. Read on...
Desktop Bottom Promotion