நீங்கள் விரும்பி சாப்பிடும் இந்த பழம் உங்கள் உடல் எடையை எப்படி அதிகரிக்க செய்கிறது தெரியுமா?

Subscribe to Boldsky

பழங்கள் சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். பழங்கள் சுவை மட்டுமின்றி உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதிலும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் பழங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் சில பழங்கள் உங்களுக்கு சில தீமைகளையும் வழங்கக்கூடும்.

side effects of eating too much grapes

பெரும்பாலான மக்கள் சாப்பிடும் முக்கியமான பழங்களில் ஒன்று திராட்சை. வைட்டமின் சி அதிகமுள்ள திராட்சை நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இது வழங்கும் நன்மைகளை போல இதனால் சில தீமைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த பதிவில் திராட்சை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலர்ஜி

அலர்ஜி

திராட்சையால் அலர்ஜிகள் ஏற்படுவது மிகவும் குறைவுதான் ஆனால் இது திராட்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் தவிர்க்க முடியாத ஒன்று. திராட்சையை தொடுவது கூட சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துமமாம். இதனால் ஏற்படும் விளைவுகள் என்னவெனில் வீக்கம், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள், சுவாச பிரச்சினை, தொடர்ச்சியான தும்மல் போன்றவையாகும். சிலசயமங்களில் சிலர் திராட்சை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அனாஃபிலாக்டிக் அதிர்ச்சி நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் திராட்சை மீது உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளாக கூட இருக்கலாம்.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

திராட்சைகளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு கப் திராட்சையில் 100 கலோரிகள் மட்டுமே உள்ளது. திராட்சையின் மிகப்பெரிய பிரச்சினை அதன் அளவுதான், ஏனெனில் இதன் அளவும், சுவையும் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை மறக்கவைக்கும். இது 100 கலோரிகளின் அளவை இருமடங்காக உயர வழிவகுக்கிறது. எனவே நீங்கள் தொடர்ச்சியாக திராட்சை சாப்பிடும்போது உங்கள் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, இது அப்படியே எடை அதிகரிக்கவும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

அதிக கார்போஹைட்ரேட்

அதிக கார்போஹைட்ரேட்

கார்போஹைட்ரேட் உங்கள் உடலில் குளுக்கோஸாக மாறுகிறது. நமது தினசரி உணவில் கார்போஹைட்ரேட் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவில் 45 முதல் 60 சதவீதம் வரை கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கிறது. திராட்சை அதிகளவு சாப்பிடுவது உங்கள் உணவில் அதிகளவு கார்போஹைட்ரேட்டை சேர்க்கிறது. உங்கள் உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பது உங்களுக்கு நல்லதல்ல.

MOST READ:உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க இந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிராதீர்கள் என்கிறார் சுக்ராசாரியார்

செரிமான கோளாறு

செரிமான கோளாறு

அதிகளவு திராட்சை மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவது உங்களுக்கு செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும். சிலசமயம் இதனால் வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம். இதில் உள்ள அதிகளவு ப்ரக்டோசால் அடிவயிற்றில் வலி மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். ப்ரக்ட்டோஸ் பாதிப்பு உள்ளவர்கள் திராட்சை சாப்பிடுவது அவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வாயுப்பிரச்சினை

வாயுப்பிரச்சினை

திராட்சைகள் செரிக்கும் போது அதிகளவு ப்ரக்ட்டோஸ் வெளியிடப்படுகிறது. செரிமான மண்டலம் இந்த ப்ரெக்டொசை உடைத்து செரிமானம் அடைய வைக்கிறது, ஆனால் இது அதிகமாக இருக்கும்போது அதன் ஒருபகுதி பெருங்குடலுக்குள் செல்கிறது. பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த ப்ரெக்டொசை வாயுவாக மாற்றுகிறது. இதனால் வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

வாந்தி

வாந்தி

நீங்கள் உங்கள் உணவில் அதிகமாக நார்ச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளாவிட்டால் நீங்கள் திராட்சை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் திராட்சையிலிருந்து கிடைக்கும் மொத்த நார்ச்சத்துக்களையும் செரிக்க வைப்பது என்பது நமது செரிமான மண்டலத்திற்கு மிகவும் கடினமான காரியமாகும். இதன் விளைவாக உங்கள் வயிற்றில் பல அசௌகரியங்கள் ஏற்படலாம். இது உங்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட வழிவகுக்கும். இதில் உள்ள சில வைட்டமின்கள் கூட வாந்தி ஏற்பட தூண்டக்கூடும்.

MOST READ:ஃபேஷன் என்ற பெயரில் அலங்கோலமாக போட்டோவில் சிக்கிய பெண்கள் # Funny Fashion Fails

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    side effects of eating too much grapes

    Grapes are healthy in general and can give us many benefits. But, there is a darker side of grapes as well.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more