வார ராசிபலன் (05 ஏப்ரல் 2026-11 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஏப்ரல் 05 ஆம் தேதி முதல் 2026 ஏப்ரல்11 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 05 April 2026 To 11 April 2026 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடந்த வாரத்தை விட அதிர்ஷ்டமானதாக இருக்கும். வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் எதிர்பார்த்த சில நல்ல செய்திகளை பெறக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதால் சந்தோஷத்தை உணர்வீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் நல்லிணக்கமும் நிலவும். காதல் வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். குடும்பம், தொழில் மற்றும் வணிகம் தொடர்பான கவலைகளால் சூழப்பட்டிருப்பீர்கள். வேலை தொடர்பாக நீங்கள் நீண்ட அல்லது குறுகிய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த பயணம் எதிர்பார்த்ததை விட குறைவான பலனையே தரும். மாணவர்களுக்கும் மன பதட்டம் மற்றும் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். அதிக கடின உழைப்பு மற்றும் முயற்சி காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சினைகளைத் தவிர்க்க, உங்கள் உணவு மற்றும் தினசரி வழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருமணமானவர்கள் அவர்களின் துணையை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். பதவி உயர்வு அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நிலம், கட்டிடம் அல்லது மூதாதையர் சொத்து தொடர்பான தகராறு தீர்க்கப்படும். வெளிநாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று போராட்டம் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. இந்த வாரம் உங்களின் வேலைகள் சரியாக முடிக்கப்படாததால், மனதில் அமைதியின்மை ஏற்படும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் இரத்தம் தொடர்பான பிரச்சினைகள் தோன்றக்கூடும். திருமண வாழ்க்கையில் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வார தொடக்கத்தில் நீண்ட அல்லது குறுகிய பயணத்தை மேற்கொள்ளலாம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் சில சவால்களை சந்திக் நேரிடும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று பெரிய செலவுகள் வரக்கூடும். அதற்காக கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கலாம். வார இறுதியில், வேலையில் மெதுவான முன்னேற்றம் மற்றும் சிறிது லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவைப் பேண அதிகமாக உயர்ச்சிக்க வேண்டியிருக்கும்.

கன்னி

இந்த வாரம் மெதுவான முன்னேற்றத்துடன் தொடங்கும். ஆனால் போக போக எதிர்பார்த்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிலம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சினைகள் கவலையை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தினரும் நலம் விரும்பிகளும் உங்களை ஆதரிப்பார்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பெரிய பரிவர்த்தனைகள் காரணமாக நிதி நிலைமை நிலையற்றதாக இருக்கும். ஆனால் இறுதியில் பணம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உறவுகளில் ஒத்துழைப்பும், அன்பும் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். எந்த பெரிய முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். நண்பர்களின் ஆலோசனையைப் பெற்ற பின் எந்த முடிவையும் எடுங்கள்.

துலாம்

இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தவறான புரிதல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். வேலைகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும். இந்த வாரம் நிதி நிலை வலுவாக இருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது நல்ல நிதி நன்மைகளைத் தரும் வகையில் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். ஆனால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமானதாக இருக்கும். திட்டமிட்ட வேலை சரியான நேரத்தில் முடிவடையும். ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக அளவு பணம் செலவிட நேரிடும். பெரிய செலவுகள் இருந்தாலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்கள் போன்றவர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் கல்வி குறித்த பெரிய கவலைகள் தீர்க்கப்படும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை வாங்குவது மற்றும் விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். காதல் உறவுகள் ஆழமாகும். கணவன் மனைவி இடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் மற்றும் உறவுகள் குறித்து அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரம் பணத்தை சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். சிறு தவறு செய்தாலும், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். குடும்பப் பொறுப்புகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படலாம்.

மகரம்

இந்த வாரம் தொழிலில் முன்னேற பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய அலைய வேண்டியிருந்தாலும், பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். வாரத்தின் நடுப்பகுதியில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலை ஒருவரின் உதவியுடன் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வணிகத்தில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

கும்பம்

இந்த வாரம் சுமாராக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக நீங்களே எதையும் செய்ய முயற்சிக்க வேண்டும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் பணியிடத்தில் மற்றவர்களை கேலி செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடும். பணியிடத்தில் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு நிம்மதியான வாரமாக இருக்கும். செல்வாக்கு மிக்க நபர் அல்லது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் உங்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் நிதி பரிவர்த்தனைகளில் சற்று எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். வாரத்தின் முதல் பாதியில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் இனிமையாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலையை அனுபவிக்கலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, April 4, 2026, 23:20 [IST]
Desktop Bottom Promotion