கள்ள உறவு அதிகமாக இருக்கும் இந்தியாவின் டாப் 5 நகரங்கள் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சிகரமான செய்தி

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் திருமண பந்தம் மிகவும் புனிதமானதாகவும், ஒழுக்கமானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இந்த நம்பிக்கையை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.

திருமணம் மீறிய உறவுகளுக்கான ஒரு டேட்டிங் தளமான 'Gleeden', இந்தியாவில் நான்கு மில்லியன் பயனர்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ரகசியமான உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேவைக்கு இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். காதல் மற்றும் திருமணம் போன்ற உறவுகளை புனிதமானதாகவும் வாழ்நாள் முழுவதுக்கானதாகவும் கருதிப் போற்றும் ஒரு நாட்டில், வாழ்க்கை முறையும், டிஜிட்டல் தளங்களும் எப்படி மக்களின் உறவுமுறையை சத்தமே இல்லாமல் மாற்றியமைத்து வருகின்றன என்பதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

Extramarital Dating App Reveals 148 Surge in Women users in India and Hits 4 Million Subscribers

Gleeden அறிக்கை

Gleeden தளத்தின் சமீபத்திய தரவுகளின்படி, அதன் பயனர்களில் சுமார் 65 சதவீதம் பேர் ஆண்களாகவும், மீதமுள்ள 35 சதவீதம் பேர் பெண்களாகவும் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை இந்த தளத்தில் அதிகமாக இருந்தாலும், தற்போது பெண்கள் இந்த செயலியில் (App) இணையும் விகிதம் கணிசமாக அதிகரித்து வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த செயலியில் இணையும் பெண்களின் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்ந்துள்ளது; இது, அதிகமான பெண்கள் தங்கள் உறவுமுறைகள் குறித்த முடிவுகளைச் சுதந்திரமாக எடுப்பதில் அதிக சுதந்திரத்தை உணர்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது?

நகர வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, ​​பெங்களூர் சுமார் 18 சதவீத பயனர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், சுமார் 17 சதவீதத்துடன் ஹைதராபாத் உள்ளது. இந்தியாவின் தேசியத் தலைநகரான டெல்லி சுமார் 11 சதவீத பயனாளர்களைக் கொண்டுள்ளது, அதேவேளையில் மும்பை 9 சதவீத பயனாளர்களைக் கொண்டுள்ளது. சுமார் 7 சதவீதப் பயனாளிகளுடன் புனேவும் இதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் லக்னோ, சண்டிகர், சூரத், கோயம்புத்தூர், புவனேஸ்வர், பாட்னா, குவஹாத்தி மற்றும் ராய்ப்பூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

Extramarital Dating App Reveals 148 Surge in Women users in India and Hits 4 Million Subscribers

எந்த நேரத்தில் ஆக்டிவாக உள்ளது?

App-ல் பயனர்களின் நடத்தையும் சில தனித்துவமான போக்குகளை வெளிப்படுத்துகிறது. பயனர்கள் பொதுவாக தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை அரட்டையடிக்கின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மீண்டும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் என இரண்டு முக்கிய நேரங்களில் பயனர்களின் செயல்பாடு உச்சத்தில் உள்ளது.

பெண்கள் எப்படிப்பட்ட ஆண்களை விரும்புகிறார்கள்?

இந்த தளத்தில் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன்களும் சில தெளிவான போக்குகளைப் பின்பற்றுகின்றன. ஆய்வின் படி, பெரும்பாலான ஆண்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களைத் தேடுகின்றனர், அதே சமயம் பெண்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களை விரும்புகிறார்கள். பல பெண்கள் மருத்துவர்கள், ஐடி மற்றும் ஆடிட்டர் போன்ற பொருளாதாரரீதியாக நிலையான ஆண்களை விரும்புவதாகவும் தெரிகிறது, இது திருமணம் மீறிய உறவில் கூட பொருளாதார நிலைத்தன்மையும், தொழில் வாழ்க்கையும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

2025 Gleeden கணக்கெடுப்பு

2025-ஆம் ஆண்டில், Gleeden நிறுவனத்தின் சார்பில் IPSOS ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு, இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்த, Gen Z, Millennials மற்றும் Gen X போன்ற பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சார்ந்த 1,510 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியிருந்தது. குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்காகப் போதுமான நேரம் ஒதுக்க இயலாததே, திருமணம் மீறிய உறவில் ஈடுபவதற்கான முக்கியக் காரணமாக இருந்ததாக ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 33 சதவீதம் பேர் தெரிவித்தனர். வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் Millennials தலைமுறையினரே, இந்த குழுவில் பெரும்பான்மையான பங்கைக் கொண்டிருந்தனர்.

மற்ற சிக்கல்கள்

மற்றொரு முக்கியப் பிரச்சினை உணர்ச்சிரீதியான துண்டிப்பு ஆகும். தங்கள் உறவுகளில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியவர்களில் கூட, 51 சதவிகிதத்தினர் தங்கள் துணையுடன் உணர்வுரீதியான பிணைப்பு இல்லை என்று ஒப்புக்கொண்டனர். சுமார் 42 சதவிகிதத்தினர் தங்கள் உறவில் உற்சாகம் இல்லை என்று கூறினர், அதே நேரத்தில் 38 சதவிகிதத்தினர் உடல்ரீதியான நெருக்கம் இல்லாததைத் திருமணம் மீறிய உறவுக்கான முக்கிய காரணமாக கூறினர்.

GenX தலைமுறையினர் உணர்வுரீதியாகத் துண்டிக்கப்பட்டதாக உணர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், GenZ தலைமுறையினர் உடல்ரீதியான நெருக்கத்தில் அதிருப்தியுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அனைத்து வயது மற்றும் பொருளாதார நிலையில் உள்ள மக்களும் தங்கள் தற்போதைய உறவுக்கு வெளியே புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அடிக்கடி சிந்திப்பதாக ஒப்புக்கொண்டனர்.

ஆண்-பெண் இருவரில் யார் அதிகம் துரோகம் செய்கின்றனர்?

இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களும் திருமணம் மீறிய உறவுகளில் கிட்டதட்ட சமமாக ஈடுபடுவதாக கண்டறிந்துள்ளது. சுமார் 43 சதவிகித ஆண்களும் 42 சதவிகிதப் பெண்களும் உணர்வுரீதியான அல்லது உடல்ரீதியான துரோகத்தை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர். சுமார் 45 சதவிகிதத்தினர், தகாத உறவு சில சமயங்களில் உற்சாகத்தை மீண்டும் கொண்டு வந்து, தேக்கமடைந்த உறவைப் புதுப்பிக்க உதவும் என்று நம்புவதாகக் கூறியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் விதமாக சுமார் 41 சதவீதம் பேர், தங்கள் துணை பரிந்துரைத்தால் ஒரு திறந்த உறவுமுறைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினர், மேலும் 35 சதவீதம் பேர் தாங்கள் ஏற்கனவே அத்தகைய உறவில் இருப்பதாகக் கூறினர்.

சமூக ஊடகங்களின் தாக்கம்

இந்த மாற்றத்தில் சமூக ஊடகங்கள் ஒரு முக்கியப் பங்காற்றின. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 68 சதவீதம் பேர், மற்றவர்களுடன் இணைவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூக ஊடகங்கள் துரோகத்தை எளிதாக்கியதாகக் கூறினர். சுமார் 64 சதவீதம் பேர், உறுதியான உறவில் இருந்தபோதிலும் இணையத்தில் சில பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்தியர்களின் மிகவும் புனிதமான பந்தமாக கருதப்படும் திருமண உறவு மெல்ல மெல்ல அதன் முக்கியத்துவத்தையும், புனிதத்தையும் இழந்து வருவதற்கு இந்த ஆய்வு சாட்சியாக உள்ளது.

Desktop Bottom Promotion