Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபி...வாழைக்காயை இந்த மாதிரி செய்யுங்க... மட்டன் சுக்கா மாதிரியே இருக்கும்!
Kalyana Veetu Vazhakkai Varuval Recipe in Tamil: சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு சைடிஷ் இல்லாமல் சாப்பிடுவது என்பது மிகவும் கடினமானது. மதிய வேளையில் சாம்பார் சாதத்துக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயை வழக்கமாக செய்வது போன்று வறுவல் செய்து சாப்பிடாமல், ஒருமுறை கல்யாண வீட்டு ஸ்டைலில் வறுவல் செய்து சாப்பிடுங்கள்.
வாழைக்காயை பொதுவாக பஜ்ஜி போட்டோ அல்லது ஒரே மாதிரியாக வறுவல் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் இந்த ஸ்டைலில் செய்யும் வாழைக்காய் வறுவலானது மட்டன் சுவையில் அட்டகாசமாக இருக்கும். மேலும் இப்படி வறுவலை செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.

உங்களுக் கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 2
- எண்ணெய் - 3 ஸ்பூன்
மசாலா அரைக்க:
- துருவிய தேங்காய் - அரை கப்
- இலவங்கப்பட்டை - 2 துண்டு
- கிராம்பு - 2
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - 1 இன்ச்
- சின்ன வெங்காயம் - 6
- சோம்பு - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- வாழைக்காயை நன்றாகக் கழுவி, தோலை உரிக்கவும். சதுர வடிவும் நறுக்கி தனியாக வைக்கவும்.
- இதை ஒரு பாத்திரத்தில் அல்லது இட்லி பானையில். வாழைக்காய் மென்மையாகவும், அதே சமயம் உறுதியான வடிவத்துடனும் இருக்க வேண்டும்.
- வாழ்க்கையை ஆறியதும் ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, வாழைக்காய் பொன்னிறமாகும் வரை லேசாக வறுக்கவும். பின்னர் இதை தனியாக வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலையைப் பொரியவிடுங்கள்.
- கடுகு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் அரைத்த மசாலா, உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
- கடைசியாக வறுத்த வாழைக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து, மசாலா வாழைக்காயுடன் நன்றாக கலக்கவும் வரை கிளறவும்.
- வாழைக்காய் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்தால் கல்யாண வீட்டு ஸ்டைல் வாழைக்காய் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications