Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சுவையான வேர்கடலை புதினா சட்னி ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க
Peanut Mint Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசைதான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் கொஞ்சம் புதினாவும், வேர்க்கடலையும் உள்ளதா? பொதுவாக புதினா மற்றும் வேர்க்கடலையை வைத்து தனித்தனியாகத்தான் சட்னி செய்திருப்போம். ஆனால் இந்த இரண்டையும் வைத்து ஒரு சட்னியை முயற்சி செய்துள்ளீர்களா? அப்படியெனில் இந்த சட்னியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கோப்பை தோல் நீக்காத வறுத்த வேர்க்கடலை
- 1 பெரிய வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது)
- ¼ கப் புதினா இலை
- ¼ கப் கொத்தமல்லி இலை
- 2 பச்சை மிளகாய்
- 4 பூண்டு பல்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டுப் பல் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும்.
- வெங்காயம் நன்றாக மென்மையாகும் வரை மிதமான தீயில் வதக்கவும். பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சுருங்கும் அளவிற்கு வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- இந்த கலவை ஆறிய பிறகு அதை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் வறுத்த வேர்க்கடலையுடன் உப்பு மற்றும் புளியைச் சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- இந்தத் தாளிப்பைச் சட்னியின் மேல் கொட்டி நன்கு கிளறினால் சுவையான வேர்க்கடலை புதினா சட்னி தயார்.



Click it and Unblock the Notifications