குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது!

Jupiter Mercury Make Parivarthan Yog On 11 April 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் பெயர்ச்சிகளால் மட்டுமின்றி, அவற்றின் பார்வைகள், நிலைகள் ஆகியவற்றினால் உருவாகும் யோகங்களும் ஒருவரது வாழ்வில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் கிரகங்களின் இளவரசான கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் ஏப்ரல் 11 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இப்படி குரு பகவானின் ராசிக்கு புதன் செல்வதால் பரிவர்த்தனை யோகம் உருவாகவுள்ளது.

Jupiter Mercury Make Parivarthan Yog On 11 April 2026 List Of Lucky Zodiac Signs

ஜோதிடத்தில் இரண்டு கிரகங்கள் தங்களுக்குரிய ராசிகளை மாற்றி அமர்ந்து பயணிக்கும் போது 'பரிவர்த்தனை யோகம்' உருவாகும். இப்படி குரு பகவானும், புதனும் தங்களுக்குரிய ராசிகளை மாற்றுவதால் பரிவர்த்தனை யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தினால் செல்வம், புகழ், வாழ்வில் சந்தோஷம் போன்றவை பெருகும். இப்போது ஏப்ரல் 11 ஆம் தேதி உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மிதுனம்

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத அளவில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். திடீர் பண வரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

கன்னி

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தனுசு

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் நிதி தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பங்குச் சந்தை, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்து கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

குரு புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகத்தால் மீன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். சொத்துக்கள் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்க நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, April 5, 2026, 10:52 [IST]
Desktop Bottom Promotion