Latest Updates
-
Shani Jayanti 2026: சனி ஜெயந்தியான இன்று எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்? -
ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 16 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்களாம் -
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்கள ஆபத்தும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ராஜ்மாவை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப் போயிடும்... -
சனி ஜெயந்தி அன்று சனிபகவானை இந்த மாதிரி வழிபடுங்க - உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கப்படும் -
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு! சாமானிய மக்களின் பட்ஜெட் இனி என்னவாகும்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! -
அங்கமாலி மாங்கா கறி ரெசிபி - இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க, வேற லெவல் சுவையில் இருக்கும் -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. ஏழரை சனியின் தாக்கம் குறையும்..
ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்
Aatu Nurai eeral Benefits In Tamil: இறைச்சிகளில் மட்டன் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அதுவும் ஆட்டின் மூளை ஆகட்டும், கல்லீரல் ஆகட்டும், குடல் ஆகட்டும், ஆட்டின் ஒவ்வொரு உறுப்புக்களுமே உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. முக்கியமாக மட்டன் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருள்.
எப்படி மட்டன் ஏராளமான நன்மைகளை வழங்குகிறதோ, அதற்கேற்ப அதன் சுவையும் பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால் மற்ற இறைச்சிகளை விட ஆட்டிறைச்சியில் கலோரிகள், சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை மிகவும் குறைவு என்பதால், இதை அளவாக உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலருக்கு ஆட்டு நுரையீரல் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இன்னும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆட்டு நுரையீரல் எடை இழப்புக்கு உதவுமா மற்றும் ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆட்டு நுரையீரல் எடை இழப்புக்கு உதவுமா?
தற்போது உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் முயற்சித்துக் கொண்டுள்ளனர். அத்தகையவர்கள் ஆட்டு நுரையீரல் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் "100 கிராம் ஆட்டு நுரையீரலில் 90-100 கலோரிகள் தான் உள்ளது. அதோடு அதில் 15-18 கிராம் புரோட்டீன் உள்ளது. 2-3 கிராம் கொழுப்பு உள்ளது. முக்கியமாக கொலாஜன் மற்றும் எலாஸ்டின் அதிகம் நிறைந்த ஒரு அற்புதமான உணவுப் பொருள். எனவே ஆட்டு நுரையீரலானது உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார்.
இரத்தசோகையை போக்கும்
"ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 10 மிகி இரும்புச்சத்து தேவை, பெண்களுக்கு 20 மில்லிகிராமும், கர்ப்பிணி பெண்களுக்கு 27 மிகி இரும்புச்சத்தும் தேவை. 100 கிராம் ஆட்டு நுரையீரலில் 10 மிகி இரும்புச்சத்து உள்ளது. அதுவும் இதில் ஹீம் அயன் என்னும் எளிதில் உடலால் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்தும், வைட்டமின் பி12 சத்தும் உள்ளது என்பதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் அற்புதமான உணவுப் பொருள். முக்கியமாக ஆட்டு நுரையீரலில் நுண் ஊட்டச்சத்துக்களும் ஏராளமான அளவில் உள்ளன" என்று டாக்டர் கூறினார்.
யாரெல்லாம் ஆட்டு நுரையீரல் சாப்பிடக்கூடாது?
என்ன தான் ஆட்டு நுரையீரல் சத்துக்கள் அதிகம் நிறைந்ததாக இருந்தாலும், குறிப்பிட்ட மக்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தாலோ, கீல்வாதம் இருந்தாலோ, யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகம் இருந்தாலோ, ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால் அதிகம் மற்றும் யூரிக் அமில அளவை அதிகரிக்கும் பியூரின் அதிகமாக உள்ளது என்று டாக்டர் கூறினார்.
"முக்கியமாக ஆட்டு நுரையீரலை வாங்கி சமைக்கும் முன், அதை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். ஏனெனில் நுரையீரல் ஒரு வடிகட்டி. நாம் தினமும் சுவாசிக்கும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவை நுரையீரலில் தான் இருக்கும். எனவே இதை நன்கு சுத்தம் செய்துவிட்டு சாப்பிட்டால் ஆரோக்கிய நன்மைகள் மட்டும் தான் கிடைக்கும், தொற்றுகள் எதுவும் ஏற்படாது" என்றும் டாக்டர் கூறினார்.
ஆட்டு நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
* முழு ஆட்டு நுரையீரலை வாங்கி வந்து, அதன் மூச்சுச்குழாய் வழியாக குறைந்தது 1 1/2-2 லிட்டர் நீரை ஊற்றும் போது, அது பலூன் போன்று பெரிதாகும். பின் அதை நன்கு குலுக்கி, நீரை முழுவதுமாக வெளியேற்றி கழுவ வேண்டும். இப்படி 4-5 முறை நுரையீரலை கழுவ வேண்டும்.
* அதன் பின் நுரையீரலின் மேல் ஒரு மெல்லிய தோல் போன்று வரும், அதை நீக்க வேண்டும். பின் அதை நீரில் நன்கு ஒருமுறை கழுவ வேண்டும்.
* அடுத்து நுரையீரலை மட்டும் வெட்டி எடுத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குழாய் போன்று இருப்பதன் மேல் குடல் போன்று இருக்கும். அதை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குழாயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* எடுத்து வைத்துள்ள குடலில் ஜவ்வு போன்று இருக்கும். அதை நீக்கிவிட்டு, போட்டியை சுத்தம் செய்வது போன்று திருப்பி விட்டு சுத்தம் செய்து, துண்டுகளாக்க வேண்டும்.
* சிலருக்கு ஆட்டு நுரையீரல் சுத்தம் செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் நன்கு சுத்தமாக கழுவிய பின் சாப்பிட்டால் தான், ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
