வாரம் ஒருமுறை ஆட்டு குடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

Mutton Boti Benefits In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவரது வீடுகளிலும் அசைவ உணவுகளை பலவாறு சமைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தானே நம்மால் சமைத்த உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட முடியும்.

அசைவ பிரியர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஓடுவது, பறப்பது, நடப்பது, நீந்துவது என்று அனைத்தையும் ரசித்து சாப்பிடுவார்கள். அதில் நிறைய பேர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் ஆட்டு போட்டி/ ஆட்டு குடல்.

Mutton Boti Benefits: Top 7 Health Benefits Of Eating Mutton Intestine In Tamil

ஆட்டுக்கறி மிகவும் சத்தானது மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். ஆட்டின் அனைத்து உள்ளுறுப்புக்களையும் சமைத்து சாப்பிடுவதுண்டு. அதுவும் ஆட்டு குடலை வறுவல், குழம்பு செய்து சாப்பிட பலரும் விரும்புவர்.

ஆட்டு குடலில் இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகமாக உள்ளன.

முக்கியமாக ஆட்டு இறைச்சிகளில் புரோட்டீன் தான் வளமான அளவில் இருக்கும். விலங்குகளின் புரோட்டீன்களானது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து 9 வகையான அத்தியாவசிய அமினோஅமிலங்களும் உள்ளன. இப்போது ஆட்டு குடலை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. கொழுப்பு குறைவான புரோட்டீன்

1/2 கப் ஆட்டு குடலில் 96 கலோரிகளும், 14 கிராம் புரோட்டீனும், 4 கிராம் மொத்த கொழுப்பும், 1.5 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் உள்ளன. தினசரி எடுக்க வேண்டிய சாச்சுரேட்டட் கொழுப்புகளின் வரம்பு ஒரு ஆணுக்கு 30 கிராமும், பெண்ணுக்கு 20 கிராமும் ஆகும்.

2. வைட்டமின் பி12 அதிகம்

1/2 கப் ஆட்டு குடலில் 1.57 மிகி வைட்டமின் பி12 உள்ளது. இது ஒரு நாளைக்கு வேண்டிய அளவுகளில் சுமார் 65 சதவீதம் அடங்கும். வைட்டமின் பி12 சருமம், தலைமுடி, கண்கள், கல்லீரல் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. கூடுதலாக வைட்டமின் பி12 மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் டிஎன்ஏ உற்பத்திக்கும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவி புரிகிறது.

3. பாஸ்பரஸ் அதிகம்

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் பாஸ்பரஸ் உள்ளது. முக்கியமாக எலும்புகள் மற்றும் பற்களில் இந்த பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. ஏனெனில் இது எலும்புகள் மற்றும் பற்களின் உற்பத்திக்கு தேவையான அத்தியாவசியமான சத்தாகும். பாஸ்பரட்ஸ கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை உடைத்தெறிய உதவி புரிகிறது மற்றும் இது புரோட்டீன் உற்பத்திக்கும், செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது.

4. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

எப்படி உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் ஜிங்க் சத்தும் மிகவும் இன்றியமையாதது. ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஜிங்க் சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஜிங்க் ஆட்டு குடலில் அதிகமாக உள்ளது. 1/2 கப் ஆட்டு குடலில் 1.6 மில்லிகிராம் ஜிங்க் உள்ளது.

5. செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்

ஆட்டு குடல் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆட்டு குடலில் உள்ள ஜெலட்டின் மற்றும் புரோபயோடிக்குகள் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. முக்கியமாக ஆட்டு குடலை உட்கொண்டால், வயிற்றில் புண் இருந்தாலும் அது சரியாகும்.

6. மூளை ஆரோக்கியம் மேம்படும்

ஆட்டு குடலில் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், அறிவாற்றல் திறனுக்கும் தேவையான கோலைன் உள்ளது. இது மூளையில் சமிக்ஞைகளை கடத்தும் ரசாயனங்களான நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிற்து. ஆகவே ஆட்டு குடலை உட்கொள்ளும் போது மூளைச் செல்களின் கட்டமைப்பு சீராக பராமரிக்கப்படுவதோடு, மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது.

7. தசைகளின் வளர்ச்சி

ஆட்டு குட்லில் உயர் தரமான புரோட்டீன் வளமான அளவில் உள்ளது. புரோட்டீன்கள் தசைகளின் வளர்ச்சிக்கும், தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ளவும் மிகவும் தேவையான சத்தாகும். மேலும் ஆட்டு குடலில் கிரியேட்டினைன் உள்ளது. இது தசைகளின் செயல்பாடு மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, September 16, 2023, 10:45 [IST]
Desktop Bottom Promotion