ஏன் உணவு சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

தரையில் உட்கார்ந்து உணவருந்தும் பழக்கம் பாரம்பரியமாக இந்தியர்களிடையே பின்பற்றப்பட்டு வருகிறது. நீங்கள் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் கவனித்தால் அவர்கள் தரையில் உட்கார்ந்தே தங்கள் உணவுகளை உண்டனர்.

ஏன் இப்படி சாப்பிட வேண்டும் என்பதை கவனித்தால் இதற்கு பின்னாடி பலன் தரும் நிறைய ஆச்சரியமூட்டும் தகவல்கள் உள்ளன.

அந்த சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை இங்கே தொகுத்து வழங்க உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா

யோகா

இந்தியர்கள் தரையில் உட்கார்ந்து உணவருந்தும் போது கால்களை குறுக்காக போட்டு அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த அமைப்பு ஒரு யோகா நிலை. ஆமாங்க இதற்கு பெயர் சுக்ஹாசனம் ஆகும்.

இந்த சுக்ஹாசனம் அமைப்பு தான் நாம் யோகா நிலையில் இருக்கும் போது மனதிற்கு அமைதியை தருகிறது. இந்த அமைப்பு நமது தண்டுவடத்தின் கீழ் பகுதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி மெதுவான சுவாசம், தசைகளின் விரிவாக்கத்தை குறைத்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், சீரண செயல்களை துரிதபடுத்துதல் போன்ற வேலைகளை செய்கிறது.

இயற்கையாக உங்கள் உடலமைப்பை மெறுகேற்றுதல் :

இயற்கையாக உங்கள் உடலமைப்பை மெறுகேற்றுதல் :

நாம் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது நமது உடல் அமைப்பு சரியான நிலையில் அமைகிறது. நமது தோள்பட்டை உயர்த்தப்பட்டு முதுகுத் தண்டுவடம் நேராக அமைகிறது. இது நமது உடல் அமைப்பை சரியான நிலையில் வைக்க உதவுகிறது.

சீரண சக்தி அதிகரித்தல்

சீரண சக்தி அதிகரித்தல்

தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது உணவை உட்பகொள்ளு ம் போது குனிந்து சாப்பிடுவதும் பிறகு நேராக அமர்வதும் சீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இந்த முன் மற்றும் பின்னோக்கிய நகர்வு சீரண சுரப்பியை அதிகரித்து நமது சீரணிக்கும் வேலையை துரிதமாக்குகிறது.

உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது உணவின் மீதுள்ள நமது எண்ணத்தை மூளையில் ஒருமுகப்படுத்துகிறது. ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது வயிற்றுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்புகளின் சிக்னல்கள் சரியாக கடத்தப்பட்டு வயிறானது நிரம்பியதும் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால் அதிகமாக உணவருந்துவது தடுக்கப்பட்டு உடல் எடை யானது கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.

முதுகு மற்றும் இடுப்பு வலிமையாக, நெகிழ்வுத்தன்மையுடன் இருத்தல்

முதுகு மற்றும் இடுப்பு வலிமையாக, நெகிழ்வுத்தன்மையுடன் இருத்தல்

தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது முதுகுத் தசைகள், இடுப்பு, மற்றும் கோர் தசைகள் எல்லாம் நீட்சியடைகின்றன. இந்த தொடர்ச்சியான நீட்சிகள், மூட்டுகளை மடக்கி உட்கார்ந்தல், இடுப்பு ஜாயிண்ட்கள் எல்லாம் நமது இடுப்பை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. இது முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்கிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why should we sit on the floor to eat

Why should we sit on the floor to eat
Story first published: Friday, December 1, 2017, 19:00 [IST]