அப்ரிகோட், பப்பாளி, மா, தேன் மற்றும் கேரட் சேர்த்து தயாரிக்கப்படும் பழரசத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியம் சிறக்க பூச்சி மருந்து பயன்படுத்த படாத ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை காய்கறி, பழங்கள் தான் சிறந்தது. காய்கறி, பழங்கள் மூலமாக நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. இதன் மூலம் தலை முதல் கால் வரை உடல் முழுவதும் வலுமையாக வைத்துக் கொள்ள முடியும்.

அதில், அப்ரிகோட், பப்பாளி, மா, தேன் மற்றும் கேரட் சேர்த்து தயாரிக்கப்படும் பழரசம் எப்படி தயாரிப்பது, அதன் மூலம் நாம் அடையும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

 • அப்ரிகோட் - 2
 • பப்பாளி - 1/2
 • மா - 1/2
 • தேன் - தேவையான அளவு
 • கேரட் - 2
வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

அப்ரிகோட், பப்பாளி, மா, தேன் மற்றும் கேரட் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பழரசத்தில் இருந்து நாம் பெரும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, B1, B2, B6, C, D, E, மற்றும் K

செய்முறை!

செய்முறை!

 1. முதலில் கேரட்டை நன்றாக கழுவி, நன்கு அரைத்துக்கொள்ளவும்.
 2. அதனுடன் மற்ற அணைத்து பழங்கள் சேர்த்து ஜூஸரில் போட்டு அரைக்கவும்.
 3. கடைசியில் தேவையான அளவு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள்.
 4. வெள்ளை சர்க்கரை ஆரோக்கியமற்றது என்பதால் தான் தேன் சேர்த்துக் கொள்ள அறிவுரைக்கப்படுகிறது.
நன்மைகள்!

நன்மைகள்!

 • பருக்களை தடுக்கும்
 • வாயுத்தொல்லைக்கு தீர்வளிக்கும்
 • உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும்.
 • ஆன்டி - ஆக்ஸிடன்ட் அதிகரிக்க செய்யும்.
 • செரிமானம் சிறக்க உதவும்.
 • மலமிளக்க பிரச்சனை வராமல் தடுக்கும்.
 • கண்கள், சிறுநீரகம், நுரையீரலுக்கு நல்லது.
 • மினரல் சத்துக்கள் மிகுதியாக கிடைக்கிறது.
குறிப்பு!

குறிப்பு!

தேவை என்றால் பாதம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். உடல் சூடு உள்ளவர்கள் பாதாமை தவிர்த்துவிடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Apricot, Papaya, Mango, Honey and Carrot Mixed Juice

Health Benefits of Apricot, Papaya, Mango, Honey and Carrot Mixed Juice
Story first published: Wednesday, January 18, 2017, 17:31 [IST]
Subscribe Newsletter