வாய்வுத் தொல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க...

Posted By:
Subscribe to Boldsky

வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படுகிறீர்களா? ஒருவருக்கு வாய்வுப் பிரச்சனை அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை எடுப்பதால் ஏற்படும். மேலும் சாப்பிடும் சில உணவுகளும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனையான வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.

Gastric Problems? Avoid Eating These Foods!

எனவே வாய்வுத் தொல்லையால் அசௌகரியத்தை உணராமல் இருக்க ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுப் பொருட்களால், வாய்வுத் தொல்லை மோசமாகும். இங்கு வாய்வுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படும் போது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செரிமானமாவதற்கு கடினமாக இருப்பதால், அஜீரண பிரச்சனை, வயிற்றுப் பிடிப்புகள், வாய்வுத் தொல்லை போன்றவற்றை உண்டாக்கும். குறிப்பாக இரவில் இதை சாப்பிட்டால், நிலைமை மோசமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

யாருக்கு தான் உருளைக்கிழங்கு பிடிக்காது. ஆனால், வாய்வுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், இந்த காய்கறியில் இருந்து விலகி இருக்க வேண்டும். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் ஏராளமாக உள்ளது. இது செரிமானமாக தாமதமாகும். அதிலும் பருப்புகளுடன் உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிட்டால், நிலைமை மேலும் மோசமாகும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இந்த பழம் குடலில் சற்று அதிக நேரம் இருந்து, செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள மனிடோல் என்னும் சர்க்கரை, வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் இது செரிமானமாக தாமதமாகி,வயிற்றில் வாயுவை உற்பத்தி செய்து, வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். எனவே இரவில் வெள்ளரிக்காயை சாப்பிடாதீர்கள்.

சாத்துக்குடி

சாத்துக்குடி

சாத்துக்குடியை அதிகமாக சாப்பிட்டால், செரிமானத்தைப் பாதித்து, நிலைமை மோசமாக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது இரைப்பை சுவற்றை பாதிக்கும். எனவே இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால், சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Gastric Problems? Avoid Eating These Foods!

Here are some common foods to avoid if you are fighting gastric woes. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter