Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..
Drishti Yog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சமீபத்தில் தான் குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இந்த குரு பகவான் அறிவு, வளர்ச்சி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாவார்.
தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார். இப்படி நீண்ட காலம் ஒரு ராசியில் இருப்பதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ, நிலைகளின் மூலமோ யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு குரு பகவான் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனுடன் சேர்ந்து, அதுவும் பார்வையின் மூலம் திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் இந்த யோகத்தினால் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது மார்ச் 18 ஆம் தேதி குரு சுக்கிரனால் உருவாகும் திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு சுக்கிரனால் உருவாகும் திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். முதலீடுகளை செய்பவர்கள் நன்கு யோசித்து செய்தால், எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம்.
துலாம்
குரு சுக்கிரனால் உருவாகும் திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் இந்த ராசியின் சுக்கிரன் என்பதால், இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, உறவுகள் வலுவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
குரு சுக்கிரனால் உருவாகும் திருஷ்டி யோகத்தால் மீன ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். இருந்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன், ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து எடுத்தால், நல்ல பலன்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


