ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Ragi Idli With Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் என்ன டிபன் செய்வதென்று தெரியவில்லையா? இட்லி சுட மாவும் இல்லையா? உங்கள் வீட்டில் ராகி மாவும், ரவையும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு பஞ்சு போன்ற மென்மையான ராகி இட்லியை செய்யுங்கள்.

இந்த ராகி இட்லிக்கு, தேங்காய் சட்னி ஒரு அருமையான காம்பினேஷனாக இருக்கும். வெயில் காலத்தில் ராகியை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உடல் சூடு குறையும். ராகியை இட்லியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ragi Idli With Coconut Chutney How To Make Ragi Idly With Coconut Chutney Recipe

உங்களுக்கு ராகி இட்லி மற்றும் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி இட்லி மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* ரவை - 1 கப்
* ராகி மாவு 1 கப்
* புளிப்பில்லாத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
* ப்ரைடு முந்திரி - தேவையான அளவு

தேங்காய் சட்னிக்கு...

* தேங்காய் - 1/2 மூடி
* சின்ன வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* முந்திரி - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து ப்ரை செய்ய வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அதில் 1 கப் ரவையை சேர்த்து நன்கு 3 நிமிடம்ழ வறுக்க வேண்டும்.
* அதன் பின் 1 கப் ராகி மாவை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அத்துடன் புளிப்பில்லாத தயிரை 1 கப் சேர்த்து, 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து மாவை கிளறி, அத்துடன் 2 சிட்டிகை ஆப்ப சோடா மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, அழகுக்காக குழிகளில் ப்ரை செய்த முந்திரியை ஒவ்வொன்றாக வைத்து, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ராகி இட்லி தயார்.
* அடுத்து சட்னி செய்ய, மிக்சர் ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியில் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 17, 2026, 6:59 [IST]
Desktop Bottom Promotion