நீங்கள் அறியாத உங்கள் உடலில் அமிலத்தன்மையை அதிகம் உண்டாக்கும் 8 உணவுகள்!!

Posted By:
Subscribe to Boldsky
நீங்கள் அறியாத உங்கள் உடலில் அமிலத்தன்மையை அதிகம் உண்டாக்கும் 8 உணவுகள்!!- வீடியோ

அமிலம் அதிகம் இருக்கும் உணவுகள் எவை என்றால் நீங்கள் எவை என்று கூறுவீர்கள்? புளிப்பு சுவை அதிகம் உள்ள உணவுகள், அல்லது கசப்பு உள்ள உணவுகள் அமிலத்தன்மை கொண்டிருக்கும் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கும் என்று நினைப்பீர்கள். உங்கள் யூகம் தவறு.

உணவு அடிப்படையின் வகையில் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ரசாயனங்களின் அடிப்படையில் மொத்தமாக வேறுபடுகிறது. நீங்கள் சாப்பிட்டபின் உடலுக்குள் நடக்கும் வேதிவினைகளின் படி அவை அதிக ஹைட்ரஜன் அணுக்களை உண்டாக்கும்.

உடலில் அதிக ஹைட்ரஜன் அணுக்கள் அதிகரித்தால் அவை அமிலத்தன்மைக்கு மாறிவிடும். இவ்வாறான உடலுக்குள் நடக்கும் மாற்றங்களால் அவை அதிக அமிலத்தன்மை உண்டாக்கி அசிடிட்டி உருவாக்குகிறது.

எல்லா உணவுகளும் நல்லதுதான். ஆனால் உடலில் அமைப்பைப் பொறுத்து அவை நன்மையோ, தீமையோ தருகின்றது. அதிக சத்துள்ள சில உணவுகள் உடலுக்கு சில சமயம் பாதிப்பை தரும். அப்படி நீங்கள் அறிந்திடாத உடலில் அமிலத்தன்மையை உருவாக்கும் உணவுகள் எவையென பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் :

பால் :

பால் பொதுவாக அமிலத்தன்மையை குறைக்கும் என்றுதானே நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மையில்லை. பால், சீஸ், யோகார்ட், ஐஸ் க்ரீம் போன்ர பால் பொருட்கள் அமிலத்தன்மை வாய்ந்தது.

மீன் :

மீன் :

மீன் வகைகளில் பன்ன மீன், கெலக்க மீன் மற்றும் சாலம்ன் மீன் ஆகிய மீன்கள் உங்கள் உடலில் அதிக அமிலத்தன்மையை உண்டாக்குபவை. இதுபோல் இன்னும் பலவகையான மீன்கள் உடலில் அமிலத்தை உண்டுபவை இருக்கின்றது.

இறைச்சி :

இறைச்சி :

இறைச்சிகள் பொதுவாகவே அதிக புரதம் கொண்டுள்ளவை. அதாவது புரதம் உருவாவதற்குத் தேவையான அமில்னோ அமிலங்கள் அதிகம் இருப்பவை. இதனால் இவை அதிகம் உண்டாகும் உடலில் அதிகம் அசிடிட்டி உண்டாகும்.. குறிப்பாக மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சிக்கன், டர்க்கி வகை பறவை இறைச்சி போன்றவை அதிக அமிலம் உண்டாக்குபவை.

நட்ஸ் :

நட்ஸ் :

வேர்க்கடலை, பட்டாணி, மற்றும் வால் நட் என இந்த மாதிரியான நட்ஸ் வகைகள் அதிக அமிலத்தன்மை உண்டாக்கும். காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பது அல்லது அதிகமாக இவற்றையே சாப்பிடுவது என இவைகள் வயிற்று உபாதைகளை தந்துவிடு

பயிறு வகைகள் :

பயிறு வகைகள் :

எல்லா வகை பயிறு வகைகளும் அசிடிட்டி உருவாக்குபவையே. தினமும் எடுத்துக் கொள்வதை தடுக்கவும். குறிப்பாக முளைக்கட்டிய பயிறு வகைகள் மிக அதிகமாக அசிடிட்டி உண்டாக்குபவை. இவற்றை தொடர்ச்சியாக அதிகம் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் உண்டாவதை கவனிக்கலாம்.

தானியங்கள் :

தானியங்கள் :

கோதுமை, பதப்படுத்தப்பட்ட சோளம், ராகி போன்றவை அமிலத்தன்மை உருவாக்குபவை. அதற்காக இவற்றை சாப்பிடக் கூடாது என்பதில்லை. அசிடிட்டி பாதிப்பு இருப்பவர்கள் குறைவாக சாப்பிடுதல் நல்லது.

இனிப்பு வகைகள் :

இனிப்பு வகைகள் :

பொதுவாகவே இனிப்பு வகைகள் அமிலத்தன்மை அதிகம் உண்டாக்குபவை. ஜாம், கேக், சாக்லேட், போன்றவை உங்கல் உடலில் அதிகம் அமிலங்கள் உண்டுபன்னுபவை. இதனால்தான் பிரட்டில் ஜாம் சேர்த்து சாப்பிடுபவர்கல் நெஞ்செரிச்சலாம் சில சமயம் அவதிப்படுவார்கள்.

 புதினா :

புதினா :

அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் வந்தால் நிறைய பேர் புதினா கலந்த பெப்பர்மின்ட் அல்லது ஏதாவது புதினா ஜூஸ் குடிப்பார்கள். ஆனால் உண்மையில் புதினா அதிக அமிலத்தன்மையை உண்டாக்குபவை.

 தக்காளி :

தக்காளி :

தக்காளி மிகச் சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. அதிலுள்ல லைகோபின் உடலுக்கு நல்லதென்றாலும், இது வயிற்று அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்கின்றது. அமிலத்தன்மை மிக அதிகம் இருக்கும் காய்கறிகளில் இதுவும் ஒன்று என்று மருத்துவரகள் கூறுகின்றனர்.

 ஆரஞ்சு :

ஆரஞ்சு :

ஆரஞ்சு , க்ரேப் ஃப்ரூட் எனப்படும் பப்பளிமாஸ் பழங்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்பவை. இவை நெஞ்செரிச்சல் உண்டாக்கும் பழங்களில் முக்கியமானவைகள்.

அதிக புரத உணவுகள் :

அதிக புரத உணவுகள் :

மிக அதிக புரதம் கொண்டுள்ள காய்கள் மற்றும் பழங்கள் மிக அதிகமாக அமிலத்தை சுரக்கச் செய்யும் என்பதை எப்போதும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்கனே அசிடிட்டி இருந்தால் எந்த உணவு நெஞ்செரிச்சல் உண்டாக்குகிறது என பட்டியலிட்டால் புரதம் அதிகம் இருக்கும், பருப்பு வகைகள், பட்டாணி, காலிஃப்ளவர், மஷ்ரூம் என சொல்லிக் கொண்டே போகலாம். எனவே நீங்கள் அவற்றை கண்டுகொண்டு சாப்பிடுவதை தவிர்க்கலாம். அல்லது குறைத்துக் கொள்ளலாம்.

 அசிட்டி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

அசிட்டி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

அமிலத்தன்மை உண்டாக்கும் உணவுகளைப் பற்றிப் பார்த்தோம். ஆனால் அவற்றை அறவே சாப்பிடாமல் இருக்க முடியாது. சாப்பிட்ட பின் என்ன மாதிரியான பாதிப்புகள் பொதுவாக உண்டாகும் தெரியுமா?

எதுகலித்தல் நெஞ்செரிச்சல், வயிற்றுப் பகுதியில் உண்டாகும் வலி, குமட்டல் போன்றவை உண்டாகும். சிலருக்கு வயிற்றில் வாய்வு பிடிப்பு உண்டாகி வலி உண்டாகும். இவற்றிற்கு வீட்டிலேயே நிவாரணம் எடுத்துக் கொள்ளலாம். அவற்றையும் பார்க்கலாம்.

எலுமிச்சை ஜூஸ் :

எலுமிச்சை ஜூஸ் :

எலுமிச்சை அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழம் என்றாலும் அதனை நீரில் கரைத்து சிறிது உப்பும் சர்க்கரையும் கலந்து சாப்பிடும்போது உங்கள் உடலில் உண்டாகும் அமிலத்தன்மை முற்றிலும் சமமாகிறது.

இள நீர் :

இள நீர் :

இள நீர் பொதுவாகவே காரத்தன்மை வாய்ந்தது. இது குடல்களில் ம்யூகஸ் எனப்படும் கோழை போன்ற ஜெல்லை உருவாக்குகிறது. இதனால் அமிலங்கள் குடலின் சுவரைத் தாக்காமல் தடுக்கப்படுகின்றன.இதனான் வயிற்றுப் புண்ணாவதை தடுக்கப்படுகிறது. ஆனால் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிருங்கள்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

நெஞ்செரிச்சல் ஏற்படும்போது வெள்ளரிக்காயை சாலட்டாகவோ அல்லது வெள்ளரி ஜூஸாகவோ சாப்பிடுவது பலவிதத்தில் நன்மைகளை தருகின்றது. இவை உடனேயே அமிலம் சுரப்பதை தடுக்கின்றது.

 பழங்கள் :

பழங்கள் :

வாழைப்பழம் உடனடியாக நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தும். வயிற்றுப் புண்களையும் ஆற்றும். அதுபோலவே ஆப்பிளும். ஆப்பிள் அசிடிட்டிக்கு மிகவும் நன்மையை அளிக்கிறது. தினமும் உணவிற்கு முன் ஒரு வாழைப் பழம் அல்லது ஆப்பிள் சாப்பிட்டு உணவைத் தொடங்குங்கள். நல்ல பலனைத் தரும்.

 அன்னாசி :

அன்னாசி :

எலுமிச்சைப் போல் அன்னாசியிக் அமிலம் நிறைந்த பழம்தான். ஆனால் அதனை சாப்பிடும்போது அதிலிருக்கும் ப்ரோமலைன் வயிற்று அமிலங்களுடன் சேர்ந்து அமிலத்தன்மையை குறைத்து சமன் செய்கிறது. எனவே நெங்கெரிச்சலுக்கு அன்னாசிப் பழச் சாறு நல்லதுதான்.

முள்ளங்கி :

முள்ளங்கி :

சிவப்பு மற்றும் வெள்ளை நிற முள்ளங்கி இரண்டுமே றப்புமிக்க மருத்துவக்குணங்கள் வாய்ந்தவை. வயிற்றிலிருக்கும் புண்களை ஆற்றக்கூடிய அருமருந்து முள்ளங்கி. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முள்ளங்கியைச் சுவைப்பதன் மூலமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.

கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் :

கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் :

கார்போஹைட்ரேட் அமிலத்தை குறைவாக சுரக்கச் செய்யும். ஆகவே பொதுவாக கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டால் அதிக அமிலத்தன்மை உடலில் குறைந்து விடும்.

எண்ணெய் :

எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய், ஆளி விதை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்றவை அமில உற்பத்தியை குறைக்கச் செய்யும். அதோடு குடலில் உண்டாகும் அமில படிவத்தை நீர்த்துப் போகச் செய்யும். ஆகவே இது போன்ற ஆரோக்கிய கொழுப்பை சாப்பிடுவதால் அமிலத்தன்மையை சமன் செய்யலாம்.

நட்ஸ் :

நட்ஸ் :

அமிலத்தன்மை உண்டாக்கும் நட்ஸ் போல் அமிலத்தன்மையை சமன் செய்யும் காரத்தன்மை கொண்ட நட்ஸ் வகைகளும் அதிகம் உள்லது. ஊற வைத்த பாதாம், தேங்காய், பூசணி விதைதள் போன்றவற்றை சாப்பிடுங்கள். இவை அமிலத்தை சமன் செய்யும்.

 வெந்தயம் :

வெந்தயம் :

வெந்தயம் அசிடிட்டிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறு நாள் நீருடன் சேர்த்து சாப்பிடுவதால் அன்று நாள் முழுதும் நெனெரிச்சல், அமிலத்தன்மை இல்லாமல் இருக்கலாம். இது சர்க்கரை வியாதிக்கும் அருமருந்தாகும்.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழை மிகவும் அற்புதமாக அமிலத்தன்மைக்கு எதிராக செயல்படுகிறது. அதன் சதைப் பகுதியை நன்றாக ஆறேழு முறை கழுவியபின் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அமிலம் அதிகம் சுரப்பது குறைந்துவிடும். இரைப்பை புண்களையும் ஆற்றும்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸ் சிறந்த ஆரோக்கியமான கார்பஹைட்ரேட் உணவு. இது அமிலத்தன்மையை குறைக்கிறது. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கே பெரும்பாலும் அமிலம் அதிகம் சுரந்து பாதிப்புகளை தருகிறது. அவர்கள் ஓட்ஸை காலை உணவை எடுத்துக் கொள்வதால், உடலில் அமிலத்தன்மை குறையும்.

கவனிக்க வேண்டியவைகள் :

கவனிக்க வேண்டியவைகள் :

முதன் பத்தியில் சொன்னது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு, செயல் இருக்கும். ஆகவே முதலில் எந்த உணவு உங்கள் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கின்றது என முதலில் கண்டறிய வேண்டும்.

ஏனென்றால் மற்றவர்களுக்கு ஒத்துக் கொள்ளும் அதே உணவு உங்களுக்கும் ஒத்து வரும் என நினைக்கக் கூடாது. அப்படி பார்த்து உண்டு அறிந்த உணவுகளை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods that make your body acidic

Foods that make your body acidic
Story first published: Tuesday, December 5, 2017, 9:14 [IST]